»   »  விக்ரமின் 'கருடா' விரைவில் ஆரம்பம்!

விக்ரமின் 'கருடா' விரைவில் ஆரம்பம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்ரம் நடிக்கும் 'கருடா' படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடிப்பில் உருவாகி வந்த 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவுக்கு வந்தது. ஆனந்த் சங்கர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

Garuda Shooting Starts Soon

'இருமுகன்' படத்தைத் தொடர்ந்து விக்ரம் அடுத்ததாக 'கருடா' படத்தில் நடிக்கவுள்ளார். திரு இயக்கவுள்ள இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வாலை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது.

விக்ரமுக்கு வில்லனாக மகேஷ் மஞ்சுரேக்கரும் முக்கிய வேடங்களில் நாசர், கருணாஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். சில்வர்லைன் பிலிம் பேக்டரி இப்படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறது.

ஆக்ஷனை மையமாகக்கொண்டு உருவாகும் 'கருடா' படத்தின் படப்பிடிப்பை ஓமன், டெல்லி, லடாக் போன்ற பகுதிகளில் படம்பிடிக்கவுள்ளனர். கிரிநாத் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 மாதங்களில் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் நடத்திட திரு திட்டமிட்டிருப்பதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
Sources Said Vikram- Kajal Agarwal's Garuda Shooting Starts Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil