»   »  காயத்ரியின் ஜெயராமின் நிறம்

காயத்ரியின் ஜெயராமின் நிறம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ், மலையாளம், தெலுங்கு என போன இடம் எல்லாம் சினிமா கைவிட்டதால் போயஸ் கார்டனில் உள்ள தனதுவிசாலமான பங்களாவிலேயே பெரும்பாலான நேரத்தைப் போக்கிக் கொண்டு, கேடிவியில் வாரம் ஒருமுறை புதியபாடல்களுக்கு கம்பியரிங் (லூட்டி டைம் நிகழ்ச்சிக்கு) செய்துவிட்டு, அப்படியே பட்டுச் சேலைகளுக்குசெயற்கையாய் சிரித்து, ஆடி, ஓடி மாடலிங் செய்து கொண்டு பொழுது போக்கிக் கொண்டிருந்தார் காயத்ரி.

தனது மாடலிங், சினிமா தொடர்புகளை வைத்து கோடம்பாக்கத்தில் அவ்வப்போது கல்விட்டுப் பார்த்தார். ஒன்றும்பெயராமல் போகவே, அந்த முயற்சிகளையும் கைவிட்டுவிட்டு, விரைவில் திருமணம் செய்து கொள்ளும்முடிவுக்கு வந்திருந்தார்.

இந் நிலையில் அவரைத் தேடி ஒரு சினிமா வாய்ப்பு வரவே, ஸ்பைடர்மேனின் சிலந்தி ஜெல்லைப் போல, மகாகெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிட்டார்.

தி சென்னை தியேட்டர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் நிறம் என்ற படத்தில் காயத்ரி ஜெயராமை ஒருஹீரோயினாக்கியிருக்கிறார்கள். புதுமுகங்களாக 3 ஹீரோக்கள் அறிமுகமாகவுள்ளார்கள். ராஜு, மணி என்ற இருஹீரோக்கள் மட்டும் இதுவரை இறுதி செய்யப்பட்டுள்ளனர். இன்னொரு ஹீரோ தேடப்படுகிறார்.(திறமையுள்ளவர்கள் முயற்சிக்கலாம்!).

அபிநயஸ்ரீ, நிழல்கள் ரவி, பெரியார் தாசன், சந்தான பாரதி, வினுச்சக்கரவர்த்தி என மறக்கப்பட்ட பழைய முகங்கள்அனைத்தும் நடிக்கும் இந்தப் படத்தில் காயத்ரியும் மீண்டும் ரீ-எண்ட்ரி ஆவது பெ-ா-ருத்தத்திலும் பொ-ருத்தம்.

புது ஹீரோ ராஜூவுக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். இவரைத் தவிர இன்னொரு புதுமுகத்தையும் ஹீரோயினாகஅறிமுகப்படுத்தப் போகிறார்கள். நல்ல மீனாக கிடைத்தால் தன்னை டம்மியாக்கிவிடுவார்களே என்ற கலக்கத்தில்இருக்கிறாராம் காயத்ரி. இதனால் தயாரிப்பு தரப்புக்கு சோப்பு போடுவதில் தீவிரமாகியிருக்கிறார்.

எஸ்.ஜே. கிருஷ்ணா என்பவர் இயக்கும் இந்தப் படத்துக்கு இசை தேவா. தொழிலதிபரான ஜே.வி. தான்தயாரிப்பாளர்.

சூட்டிங்கை ஊட்டி, குன்னூர், மூனாறு, முதுமலை, ஏற்காடு என கண்குளிர் பிரதேசங்களில் நடத்தஆரம்பித்திருக்கிறார்கள்.

இன்னும் ஒரு ஹீரோவும், ஒரு ஹீரோயினும் புக் ஆகாத நிலையில் காயத்ரியை இந்த ஜில் பகுதிகளுக்கு அழைத்துச்சென்று, அவரையும் ராஜூவையும வைத்து ஜில் காட்சிகளை சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். விட்ட சான்ஸைபிடிக்கும் முயற்சியில் இருக்கும் காயத்ரியும் கணக்கு வழக்கு பார்க்காமல் கவர்ச்சி காட்டி வருகிறாராம்.

விஜய், சினேகன், கபிலன், முத்துவிஜயன் ஆகியோர் எழுதியுள்ள பாடல்களுக்கான ஆட்டங்களை சிங்கப்பூரில்வைத்து எடுக்கப் போகிறார்களாம். அப்படியே துக்கடா சீன்களை சென்னையில் செட் போட்டு முடிக்கஇருக்கிறார்கள்.

தங்கள் செயல்களால் மாறுபட்ட, அதே நேரத்தில் ஒரே நோக்கத்தை இலக்காகக் கொண்ட மூன்று இளைஞர்கள்சந்தித்தால் என்ன நடக்கும். அதைத் தான் கதையில் சொல்லப் போகிறார்களாம். இளமை கலாட்டாக்கள்,உணர்ச்சிகள் என வளருமாம் படம்.

காயத்ரி ரகுராம்...

சரி இன்னொரு காயத்ரியான, காயத்ரி ரகுராம் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று எட்டிப் பார்த்தோம.

செல்வராகவன் இயக்க, தனுஷ் நடிக்க ஒரு நாள் ஒரு கனவு படத்தில் இவரை ஹீரோயினாக புக் செய்தார்கள்.அதற்காக உடல் மெலியச் சொன்னார்கள். வஞ்சனையில்லாமல் வளர்ந்த தனது உடலை இந்தப் படத்துக்காகபாதியாக்கினார் காயத்ரி.

ஆனால், தனது கால்ஷீட் இடியாப்ப சிக்கல்களில் இருந்து வெளியே வரவே தனுசுக்கு 2 வருடமாகும் என்பதால்,இந்தப் படம் உருவாகுமா என்பதே சந்தேகத்திற்கிடமாகிவிட்டது.

இதனால், ஒரு சாமி படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம் காயத்ரி. என்னடா இதுபக்திக்கு வந்த சோதனை !

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil