»   »  'கட்டுக்கடங்காத' ரிஷா!

'கட்டுக்கடங்காத' ரிஷா!

Posted By:
Subscribe to Oneindia Tamil


இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடி போட்டவரான ரிஷா!வின் கட்டுக்கடங்காத கவர்ச்சி ஆட்டத்தைப் பார்க்க பெரும் கூட்டம் கூடி விட்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரிஷா!வின் குத்தாட்டத்தை படமாக்கியுள்ளனராம்.

Click here for more images

இம்சை அரசின் 23ம் புலிகேசி படத்தில் வடிவேலுவுடன் ஆடிவா பாடி வா பாடலுக்கு ஜோடி போட்டு ஆடியவர்களில் ஒருவர்தான் ரிஷா!.

இவர் தற்போது மூன்றாம் பிறை என்ற படத்தில் குத்தாட்டத்திற்கு குதியாட்டம் போட்டுள்ளார். இப்பாடலை சமீபத்தில் படமாக்கினர். கோவில் திருவிழாவில் இந்த ஆட்டம் இடம் பெறுவது போல காட்சியாம்.

தத்ரூபமாக படமாக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்களை கூட்டி வைத்து ஷூட்டிங் நடத்தினார். படு கவர்ச்சியாக வந்து நின்ற ரிஷாவைப் பார்த்த இளைஞர்களுக்கு சூடு பிடித்துக் கொண்டதாம்.

முண்டியடித்துக் கொண்டு ரிஷாவிடம் ஓடி அவரது கையைப் பிடித்து குலுக்க ஆரம்பித்தனர். சிலர் எல்லை மீறி ரிஷாவின் மேனியில் கையை வைக்க, அங்கு களேபரமாகி விட்டதாம்.

இளைஞர்களின் இம்சையில் சிக்கித் தவித்த ரிஷாவை படக் குழுவினர் பத்திரமாக மீட்டு பாதுகாப்பாக நின்றனர். பின்னர் போலீஸார் வரவழைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குத்தாட்டத்தை வேகம் வேகமாக ஷூட் செய்து விட்டு இடத்தைக் காலி செய்து கிளம்பினராம்.

கட்டுக்கடங்காத கவர்ச்சி உடையில், பொது இடத்தில் படம் பிடிக்கப் போனால் இதுபோன்ற இம்சைகளும் கூடவே வந்து சேரும். இனிமேலாவது பார்த்து, பத்திரமாக படம் எடுக்க முயற்சியுங்கள் இயக்குநர்களே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil