»   »  ஒரு பாடல், 30 சேலை

ஒரு பாடல், 30 சேலை

Subscribe to Oneindia Tamil

கோபிகா நடித்துள்ள ஒரு படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக 30 வித விதமான சேலைகளை அணிந்து அசத்தியுள்ளாராம்.

கனா கண்டேன் படத்துக்குப் பிறகு கோபிகாவை தமிழில் ரெகுலராகப் பார்க்க முடிவதில்லை. தமிழில்தான் இப்படி டபாய்க்கிறார் கோபிகா. ஆனால் மலையாளத்தில் அடுத்தடுத்து படங்களில் நடித்துக் கொண்டுதான் உள்ளார்.

அமெரிக்க பார்ட்டி ஒருவரிடம் மனதைப் பறி கொடுத்துள்ள கோபிகாவுக்கும், அவருக்கும் இடையே காதல் வலுவாகியுள்ளது. விரைவில் கல்யாண தேதியை அதிகாரப்பூர்வமாக இரு வீட்டாரும் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இப்போதே அதிக படங்களை ஒப்புக் கொள்ளாமல் நல்ல கேரக்டர்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் கோபிகா. அப்படி ஒப்புக் கொண்ட ஒரு படம்தான் வெள்ளித்திரை.

இப்படத்தில் ஒரு விசேஷம் உள்ளது. படத்தில் வரும் ஒரு பாடல் காட்சிக்காக கிட்டத்தட்ட 30 சேலைகளை மாற்றி மாற்றி அணிந்து நடித்துள்ளாராம் கோபிகா.

பெண்கள் ஒரு புடவையைக் கட்டவே சில மணி நேரம் ஆகும். இதில் 30 புடவைகள் என்றால், எத்தனை மணி நேரம் ஆனது என்று கோபிகாவிடம் கேட்டபோது, ரொம்பவெல்லாம் டைம் எடுக்கலை சாரே, குறைச்சாலன நேரம்தான் ஆனது என்று தெத்துப் பல் தெரிய அழகாக சிரித்தார்.

இப்பாடல் படு பாப்புலராகும், அதன் பின்னர் கோபிகாவின் பெயரில் பல சேலைகள் கடைகளை அலங்கரிக்கும் பாருங்கள் வெள்ளித்திரை பட யூனிட்டார் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.

சும்மா சொல்லக் கூடாது, ஒவ்வொரு சேலையிலும் அப்சரஸ் போல படு அழகாக காட்சி அளித்தாராம் கோபிகா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil