»   »  கோபிகா- ஆசின்!

கோபிகா- ஆசின்!

Subscribe to Oneindia Tamil

கேரளத்து செல்லத் தோழிகளான ஆசினும், கோபிகாவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் சந்தித்துக் கொண்டதால் உற்சாகமடைந்து கட்டிப் பிடித்து, முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர்.

சினிமாவில் நடிகர்கள் இருவர் நண்பர்களாக இருப்பது சாதாரண விஷயம். ஆனால் நடிகைகளிடம், அதிலும் முன்னணி நாயகிகளிடம் இப்படி ஒரு பந்தத்தை எதிர்பார்ப்பது கடினம்.

ஆனாலும் இப்போதைய சில முன்னணி ஹீரோயின்கள் நெருக்கமான நட்போடு இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் முக்கியமானவர்கள் ஆசினும், கோபிகாவும்.

இரண்டு பேருக்கும் நடிக்க வருவதற்கு முன்பே நல்ல நட்பாம். அந்த நட்பு சினிமாவுக்கு வந்து, பிசியான நடிகைகள் ஆன பின்னரும் கூட தொடர்ந்து வந்தது.

இவர்களைப் போலவே இவர்களின் குடும்பத்தினரும் நெருக்கமான நட்பு கொண்டவர்களாம். அடிக்கடி இரு குடும்பங்களும் சந்தித்தும் குலாவிக் கொள்ளுமாம்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு அடிக்கடி நேரில் பார்த்துப் பேசிக் கொள்வார்கள் ஆசினும், கோபிகாவும். ஆனால் நடிக்க வந்த பின்னர் இது முடியாததாகி விட்டது. காரணம் இருவரும் ஷூட்டிங் நிமித்தம் பல ஊர்களுக்குப் பறந்து கொண்டிருந்ததால்.

இந்த நிலையில் ஆசின் நடிக்கும் வேல் படத்தின் ஷூட்டிங் சென்னை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் நடந்தது. அதே ஸ்டுடியோவின் மறுபக்கத்தில் கோபிகா நடிக்கும் வெள்ளித்திரை படத்தின் ஷூட்டிங் நடந்தது.

கோபிகா பக்கத்து செட்டில் ஷூட்டிங்கில் இருப்பதை அறிந்த ஆசின், மதிய உணவு வேளையின்போது அங்கு பறந்தார். கோபிகா எங்கே என்று அவர் கேட்டபோது கேரவனில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாக கூறினார்கள்.

இதையடுத்து அங்கு ஓடிய ஆசின், கேரவன் கதவைத் திறந்து உள்ளே புகுந்தார். திடீரென ஆசினைப் பார்த்ததும் கோபிகாவுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

இருவரும் சந்தோஷக் கூக்குரலிட்டபடி கட்டித் தழுவிக் கொண்டனர். உணர்ச்சிப் பெருக்கில் மாறி மாறி முத்தமும் கொடுத்துக் கொண்டனர். பின்னர் இருவரும் கைகளைப் பிடித்தபடி அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டனர்.

அப்போது அங்கு வந்த ஆசினின் தந்தை ஜோசப், அங்கு வந்தார். கோபிகாவிடம் பாசமாக பேசினார். உன்னோட அப்பா, அம்மா எங்கே என்று கோபிகாவிடம் ஆசின் கேட்டபோது, அவர்கள் ஷாப்பிங் போயிருக்கிறார்கள் (அதானே) என்றார் கோபிகா.

நீண்ட காலம் கழித்து சந்தித்துக் கொண்டதால் நெடு நேரம் இருவரும் சந்தோஷமாக பேசியபடி இருந்தனர்.

இந்த கேரளத்து கிளிகளின் நட்பைப் பார்த்து படக் குழுவினர் ஆச்சரியப்பட்டுப் போயினர்.

பாசக்கார புள்ளைகப்பா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil