»   »  அதிர்ஷ்டவசமாய் தப்பிய கோபிகா

அதிர்ஷ்டவசமாய் தப்பிய கோபிகா

Subscribe to Oneindia Tamil
தொட்டி ஜெயா படப்பிடிப்பில் ரயில் முன் விழுவது போன்ற காட்சியில் நடிகை கோபிகா படுகாயத்துடன் உயிர் தப்பியிருக்கிறார்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க துரை இயக்கும் இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் கோபிகா.

கடந்த சில நாட்களாக சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ரங்கநாதன் மேம்பாலத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இரவுநேரங்களில் நடந்து வரும் இந்தப் படப்பிடிப்பில் ரயிலை மையமாக வைத்து காட்சிகள் எடுக்கப்பட்டன.

ஒரு தண்டவாளத்தில் ரயில் வரும்போது அருகில் உள்ள இன்னொரு தண்டவாளத்தில் எதிர் திசையில் கோபிகா ஓட வேண்டும். இதுபோன்ற காட்சி நேற்று முன் தினம் இரவு எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

ரயில் வந்து கொண்டிருந்தபோது எதிரே அடுத்த தண்டவாளத்தில் கோபிகா ஓட அதை ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரன் படம் பிடித்துக்கொண்டிருந்தார். சூட்டிங்கிற்காக அந்த ரயில் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது.

ஓட ஆரம்பித்த கோபிகா திடீரென தண்டவாளத்தில் தடுக்கி விழுந்தார். ரயில் வரும் பாதையில் விழுந்து விடாமல் சமாளித்துக் கொண்டுமறு பக்கத்தில் விழுந்தார் கோபிகா. கொஞ்சம் தடுமாறி ரயில் வந்த பக்கத்தில் விழுந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும்.

கீழே விழுநத கோபிகாவின் காலில் வெட்டு ஏற்பட்ட ரத்தம் வழிந்தது. இதையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். சம்பவம் குறித்து அறிந்து கோபிகாவின் தந்தை ஆண்டோ பிரான்சிசும் தாயார் டெய்சியும் அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர்.

ஒரு நாள் அப்பல்லோவிலேயே சிகிச்சையுடன் ஓய்வெடுத்த கோபிகா இன்று மீண்டும் காரைப்பாக்கம் பகுதியில் நடந்த தொட்டி ஜெயாசூட்டிங்கில் பங்கேற்கச் சென்றார்.

காயம் சிறியது தான் என்றாலும் ரயில் சக்கரத்தில் சிக்கயிருந்ததால் கோபிகா பெரும் அதிர்ச்சியடைந்துவிட்டதாக சூட்டிங் ஸ்பாட்டில்இருந்தவர்கள் கூறுகின்றனர்.

சூட்டிங் ஸ்பாட்டில் நடக்கவிருந்த மிகப் பெரிய அசம்பாவித சம்பவம் அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டுள்ளதாக கோலிவுட்டில்கூறுகிறார்கள்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil