»   »  கோபிகாவின் தாராளம்

கோபிகாவின் தாராளம்

Subscribe to Oneindia Tamil
கோபிகாவும் கோதாவில் இறங்கிவிட்டார்.

தனது சொந்த ஊரான கேரளத்தில் இருந்தும், மும்பை, ஆந்திராவில் இருந்தும் கிடைக்கிற வண்டியைப் பிடித்து கோடம்பாக்கத்தை நோக்கிசெல்லுலாய்ட் கனவுகளுடன் தேவதைகள் திடீர் திடீர் என்று வந்து தொபுகடீர் என லேண்ட் ஆவதைப் பார்த்த கோபிகாவைஇன்செக்யூரிட்டி சீண்டிப் பார்த்துவிட்டது.

ஆனா.. ஆவன்னா எழுதிய மஞ்சள் சேலையுடன் மனசுக்குள்ளே காதல் வந்தல்லோ என்று நம்மை தென்றல் கலந்த பனியுடன் தாலாட்டியகோபிகா இப்போது கபால் என்று கவர்ச்சி ரூட்டைப் பிடித்து பெட்ரோல் பாம் வீச ஆரம்பித்திருக்கிறார்.

கனாக் கண்டேன் படத்தில் ஸ்ரீகாந்துக்கு கந்தர்வ இலக்கணம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் கோபிகா. நம்ப முடியவில்லையாஜென்டில்மேன்.. ஒத்தை கண்ணை மூடிக்கொண்டு இந்த ஸ்டில்லை பாருங்கோ..

தமிழில் முதல் படமான ஆட்டோகிராப்புக்குப் பின் தமிழில் நடித்துக் கொண்டே தெலுங்குக்குப் போன இவரை, தங்களது வழக்கமானபாணியில் பிராய்லர் கோழிக்கு மசாலா பூசுவது மாதிரி உரித்துவிட்டார்கள் ஹைதராபாத் சினிமா பார்ட்டிகள்.

ஒத்துழைப்பு தந்து நடித்தும் கோபிகா நினைத்த மாதிரி அங்கு காலூன்ற முடியவில்லை. போட்டி மிக மிகக் கடுமை. தமிழில் இவர் புக் ஆகஇருந்த சுக்ரன் மற்றும் சக்கர ஆகிய படங்கள் கை நழுவிப் போய்விட்டன.

இப்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கணாக் கண்டேன் படத்திலும் சிம்புவுடன் தொட்டி ஜெயாவிலும் மட்டுமே நடித்து வருகிறார்.

பெரும்பாலும் எல்லா படங்களிலும் ஒரே மாதிரி நடிக்கும் (போஸ் தவிர) ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக கனாக் கண்டேனில் நடிக்கிறார் கோபிகா.

இதில் கோபிகா புக் ஆகும்போது, தாராளம் குறித்து டைரக்டரும் ஏதும் சொலிக் கொள்ளவில்லை. கோபிகாவும் கேட்டுக் கொள்ளவில்லை.

ஆனால், நயனதாராவின் அலைவீச்சு கோடம்பாக்கத்தை ரொம்பவே சீண்டிப் பார்த்து வரும் நிலையில் சதா போன்றவர்களே ஏராளதாராளத்துக்கு மாறி வருகிறார்கள். இதனால் கோபிகாவின் நிலையிலும் நேற்று இல்லாத மாற்றங்கள்.

கனாக் கண்டேன் படத்தின் பாடல் காட்சிகளில் ஸ்ரீகாந்துடன் கொஞ்சம் நெருக்கமாகவே நடிக்குமாறு டைரக்டர் சொன்னபோதுகோபிகாவிடம் ஆட்டோகிராப் வெட்கம் எல்லாம் இல்லவே இல்லை.

இங்க.. பார்ராாாா.... என்று வடிவேலு போன்றவர்கள் இழுத்து ஆச்சரியப்படும் அளவுக்கு கலக்கிவிட்டார் கோபிகா, கலக்கி.

சும்மா இங்கே கடி அங்கே கடி என்றபோது, ஸ்ரீகாந்த் கூச்சத்தில் குதிக்கும் அளவுக்கு பின்னி விட்டார் கோபிகா, பின்னி.

பார்த்தார் மச்சப் பார்ட்டினான ஸ்ரீகாந்த். அவரும் போட்டிக்கு பாடலில் தனது திறமையைக் காட்ட, டைரக்டருக்கு ரொம்ப திருப்தி.

வண்டலூர் தாண்டி ஒரு கிரானைட் குவாரியில் எடுக்கப்பட்ட ஒரு பாடல் காட்சியில் ஸ்ரீகாந்த்-கோபிகாவின் ரொம்பத்தான் ஜாஸ்தியாம்.

காலில் செருப்பில்லாமல் ஆடப் பாடி உருண்டதில் முட்களும் கல்லும் குத்தி கோபிகாவுக்கும் ஸ்ரீகாந்துக்கும் காலில் ரத்தமாம். இந்த முள்குத்தையும் கூட வேஸ்ட் செய்யாமல், முள் பிராண்டிய இடங்களில் கோபிகாவுக்கு ஸ்ரீகாந்த் உதட்டால் ஒத்தடம் தருவது போலவும்காட்சிகளை சுட்டுள்ளார்களாம்.

Read more about: glamorously, gopika, kana kanden

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil