»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

மாமனார் மெச்சிய மருமகன் என்ற பெயரைப் பெற்றுள்ளார் இயக்குனர் ஹரி. தனது முதல் படமான தமிழ் மூலம்பிரசாந்த்துக்கு மறுவாழ்வு தந்தார்.

இப்போது சாமி படத்தை பெரும் ஹிட் ஆக்கி திருட்டு விசிடியால் தவித்து வந்த தமிழ் சினிமாஉலகினனரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

இதனாஸ் தாறுமாறான சந்தோஷத்தில் உள்ள ஹரிக்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம்உள்ளன.

ரூ. 1 கோடி வரை ஊதியம் தர தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்றாலும் இரண்டேஇரண்டு படங்களை மட்டுமே ஒப்புக் கொண்டுள்ளார்.

அதில் ஒன்றில் ஹீரோ சிலம்பரசன். இன்னொன்றில் மீண்டும் விக்ரமையே வைத்து படமெடுக்கமுடிவு செய்துள்ளார்.

முதலில் சிலம்பரசன் படத்தைத் தொடங்க உள்ளாராம்.

ஹரியின் வெற்றியில் அவரது மனைவியை விட மாமனாருக்குத்தான் அதிக சந்தோஷத்தைக்கொடுத்துள்ளதாம்.

சரியான ஆள்தான்யா நீ என்று ஹரியை, உச்சி குளிர பாராட்டினாராம்மாமனார்.

இவரது மாமனார்: நடிகர் விஜயக்குமார், மாமியார்: மஞ்சுளா, மனைவி: பிரீதா விஜயக்குமார்என்பது தெரியும்தானே!

இதில் இன்னொரு முக்கிய விஷயம். சமீபத்தில் ஹரியை வீட்டுக்கு அழைத்துப் பேசியிருக்கிறார்ரஜினிகாந்த். இதனால் கே.எஸ்.

ரவிக்குமாரை ஓரம் கட்டிவிட்டு இப்போதைய டிரண்டுக்கேற்றபடமெடுத்து வரும் ஹரியை வைத்தே தனது அடுத்த படத்தை ரஜினி எடுக்கலாம் என்றும் பேச்சுஎழுந்துள்ளது.

விரைவில் சிலம்பரசன் மற்றும் விக்ரம் படங்களை ஓரம் கட்டிவிட்டு ரஜினியுடன் ஹரி களத்தில்குதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பாலசந்தரிடமும் சில படங்களில் உதவி இயக்குனராக இருந்தவர் ஹரி.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil