»   »  வெயிலுக்குப் பயந்து பாகுபலி 2 படப்பிடிப்பு 2 வாரங்கள் தள்ளி வைப்பு

வெயிலுக்குப் பயந்து பாகுபலி 2 படப்பிடிப்பு 2 வாரங்கள் தள்ளி வைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடும் வெயில் காரணமாக பாகுபலி 2 படத்தின் ஷூட்டிங்கை இரண்டு வாரங்களுக்குத் தள்ளி வைத்துள்ளார் இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி.

இந்தக் கோடையில் தமிழகத்தில் மட்டுமல்ல, அதை விட அதிகமாக வெயில் சுட்டெரிப்பது ஆந்திராவிலும்தான்.

Heavy summer heat forced to stop Bahubali shoot

ஹைதராபாத்தில் நேற்று 113 டிகிரி வெயில் கொளுத்தியது. பல மாவட்டங்களில் 110 டிகிரியைத் தாண்டியதுடன் அனல் காற்று வீசியது. இன்னும் 4 நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்று வானிலை தகவல் மையம் எச்சரித்து உள்ளது.

பாகுபலி2 படப்பிடிப்பில் ஏராளமான துணை நடிகர்கள் கடும் வெயிலில் பங்கு பெறுகிறார்கள்.

இந்த படத்தில் பிரபாஸ், ரானா, நடிகைகள் தமன்னா, அனுஷ்கா ஆகியோர் வெயிலில் மேக்கப்போடு நடிக்க கஷ்டமாக உள்ளதாகக் கூறினர்.

இதன் காரணமாக நடிகைகள் பங்கேற்கும் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் படத்தின் மற்ற பணிகள் வழக்கம்போல் நடக்கும் என்றும் பிரபாஸ், ராணா ஆகியோரின் உடற்பயிற்சி தினமும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாகுபலி-2 படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

    English summary
    Director SS Rajamouli has stopped the shooting of Bahubali 2 for 2 weeks due to avoid the summer heat.
    Please Wait while comments are loading...

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil