»   »  சமந்தாவுக்கு கேக் ஊட்டிய விஷால்... 'இரும்புத்திரை' ஷூட்டிங் ஓவர்!

சமந்தாவுக்கு கேக் ஊட்டிய விஷால்... 'இரும்புத்திரை' ஷூட்டிங் ஓவர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சூட்டிங் முடிந்ததால் கேக் வெட்டி கொண்டாடிய இரும்புத்திரை படக்குழு-வீடியோ

சென்னை : அறிமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா ஆகியோர் நடித்துவரும் 'இரும்புத்திரை' படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.

தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான விஷால் நடித்துவரும் 'இரும்புத்திரை' படம் ஜனவரி மாதம் வெளிவர உள்ளது.

'இரும்புத்திரை' படத்தை விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.

ஷூட்டிங் ஓவர்

ஷூட்டிங் ஓவர்

விஷால், சமந்தா, அர்ஜுன் உள்ளிட்டோர் நடிக்கும் 'இரும்புத்திரை' படத்தின் படப்பிடிப்புகள் நேற்றோடு முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கின்றன. ஜனவரி மாதம் படத்தை திரையிட திட்டமிட்டுள்ளனர்.

வைரலான புகைப்படங்கள்

வைரலான புகைப்படங்கள்

இந்தப் படத்தின் சில போஸ்டர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. இந்தப் படத்தில் நடித்திருக்கும் விஷால் மற்றும் சமந்தாவின் சில புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

வில்லன் அர்ஜுன்

வில்லன் அர்ஜுன்

இத்திரைப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக அர்ஜுன் நடித்திருக்கிறார். டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா 'இரும்புத்திரை' படத்தின் இசையமைப்பாளராகப் பணிபுரிகிறார்.

மேஜர் கதிரவன் - டாக்டர்.ரதி தேவி

மேஜர் கதிரவன் - டாக்டர்.ரதி தேவி

விஷால் இந்தப் படத்தில் மேஜர் கதிரவன் எனும் கேரக்டரில் நடித்திருக்கிறார். சமந்தா உளவியல் நிபுனர் டாக்டர்.ரதி தேவி கேரக்டரில் நடித்திருக்கிறார். வில்லனாக அர்ஜூன் ஒயிட் டெவில் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த விவரங்களை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கேக் ஊட்டிய விஷால்

கேக் ஊட்டிய விஷால்

விஷால் மற்றும் சமந்தா முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ள இந்தப் படத்தின் கடைசி நாள் ஷூட்டிங் நிறைவடைந்ததை அடுத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். விஷால், சமந்தா ஆகியோர் கேக் ஊட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

டீசர் இன்று வெளியீடு

சமீபத்தில் நடைபெற்ற டீசர் வெளியீட்டு விழாவில் இரும்புத்திரை டீசர் ஒளிபரப்பப்பட்டது. இன்று டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Vishal and samantha starrer Irumbuthirai shooting is wrapped. Final day shooting was held yesterday. 'Irumbuthirai' teaser will be released today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X