ஜெயிலர் பட ஷுட்டிங்கில் இப்போ என்ன சீன் எடுக்குறாங்க...வெளியான அசத்தல் அப்டேட்

சென்னை : டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Recommended Video

Rajini and Kamal | இப்பவும் இப்படி மிரட்டுறாங்களே! *Kollywood

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் துவங்கி நடந்து வருகிறது. இந்த படத்தில் யோகிபாபு,மலையாள நடிகர் விநாயகன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட ஷுட்டிங் 2 நாட்கள் நடத்தப்பட்டுள்ளது. போலீஸ் ஸ்டேஷன் போன்று அமைக்கப்பட்ட செட்டில் யோகிபாபு, விநாயகன் ஆகியோர் நடித்த சீன்கள் எடுக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர் ஷுட்டிங்கில் ரஜினி

ஜெயிலர் ஷுட்டிங்கில் ரஜினி

ஆகஸ்ட் 24 ம் தேதிக்கு பிறகு ரஜினி, ஜெயிலர் பட ஷுட்டிங்கில் பங்கேற்பார் என ஏற்கனவே தகவல் வெளியானது. அதுன்படி ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் பட ஷுட்டிங்கில் கலந்து கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. ரஜினி நடிக்கும் காட்சிகள் தான் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த சீன் தான் இப்போ எடுக்குறாங்களா

இந்த சீன் தான் இப்போ எடுக்குறாங்களா

லேட்டஸ்ட் தகவலின்படி, எண்ணூரில் இரவு நேர சீன்கள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதில் லோக்கல் பார் ஒன்றில் இருந்து, மஞ்சள் நிற ஷர்ட் மற்றும் காக்கி பேண்ட் அணிந்த படி ரஜினிகாந்த் குடித்தது போல் தள்ளாடி தள்ளாடி நடந்து வருவது போன்ற சீன் எடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. கூடவே ரஜினி திரும்பி நிற்பது போன்ற ஒரு போட்டோ ஒன்றும் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இது ஜெயிலர் ஷுட்டிங்கின் போது எடுக்கப்பட்டது தானா என தெரியவில்லை.

இரவு நேர ஷுட்டிங் ஏன்

இரவு நேர ஷுட்டிங் ஏன்

நெல்சன் பல டேக்குகளில் இந்த சீனை எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. முதலில் ரஜினி நடிக்கும் சீன் என்பதால் இரவு நேரத்தில் ஷுட்டிங் நடத்தப்படுவதாக சொல்லப்பட்டது. ஆனால் இரவு நேரத்தில் நடப்பது போன்ற சீன் என்பதால் தான் இரவில் ஷுட்டிங் வைக்கப்பட்டுள்ளதாக பிறகு தெளிவுபடுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 ரஜினி இப்படி ஒரு சீனில் நடிப்பாரா?

ரஜினி இப்படி ஒரு சீனில் நடிப்பாரா?

இந்த தகவலின் அடிப்படையில் பார்த்தால் படத்தில் நீண்ட பிளாஷ்பேக் சீன் இருக்கும் என்றும், பிளாஷ்பேக்கில் தான் ஹீரோயின் உள்ளிட்ட மற்ற முக்கிய காட்சிகள் இடம்பெறலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இன்னும் சிலர் இது நம்பும் படியாக இல்லை. ஏனென்றால் ரஜினி தனது சமீபத்தில் 3 படங்களில் குடிப்பது, புகைபிடிப்பது போன்ற காட்சிகள் நடிக்கவில்லை. அதனால் இதில் நடித்திருப்பாரா என்பது சந்தேகம் தான் என்கின்றனர்.

போட்டோவ லீக் பண்ணாதீங்க ப்ளீஸ்

போட்டோவ லீக் பண்ணாதீங்க ப்ளீஸ்

இந்நிலையில் ரஜினி ரசிகர்கள் பலர், என்ன சீனா வேணாலும் இருந்துட்டு போகட்டும். தயவு செஞ்சு போட்டோ மட்டும் லீக் பண்ணீடாதீங்க என கேட்டு வருகின்றனர். இந்த படம் குறைவான எதிர்பார்ப்புடன் துவங்கப்பட்டிருந்தாலும் இனி வரும் நாட்களில் அடுத்தடுத்த அப்டேட்களால் ஜெயிலர் படத்தின் மீதான அப்டேட் பல மடங்காக அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X