»   »  டச் இஷிதா

டச் இஷிதா

Subscribe to Oneindia Tamil

தமிழில் ரொம்ம்ம்.....ப நாட்களாக எடுக்கப்பட்டு வரும் படம் டச்.

இஷிதா ஜோஷி, ஜெய் என்ற புதுமுகங்களை வைத்து தொடங்கப்பட்ட படத்தின் ஸ்டில்கள் தான்வாரத்துக்கு மூன்று வந்தவண்ணம் இருந்தன. படப்பிடிப்பு ஊர்ந்து கொண்டிருந்தது. தாய்லாந்த்,ஹாங்காங்கில் சூட்டிங் நடந்ததோடு அப்படியே படமும் நொண்டியடிக்க ஆரம்பித்தது.

இப்போது பிரச்சனைகளையெல்லாம் கடந்து படு வேகம் பிடித்திருக்கிறது படப்பிடிப்பு. விஜய்-வனிதா விஜயகுமாரை வைத்து சந்திரலேகா மற்றும் வினிதா- ஜெய்ராமை வைத்து நிலா ஆகிய படங்களைஇயக்கிய நம்பிராஜே கதை, வசனம், திரைக்கதை எழுதி டைரக்ட் செய்யும் படம் தான் டச்.

இதில் மும்பை பிகரான இஷிதா ஜோஷியையும் ஜெய் என்ற ஹீரோவையும் அறிமுகப்படுத்துகிறார். ராஜன்பி.தேவன் தலைமையில் ஒரு பெரிய வில்லன் கோஷ்டியே நடிக்கிறது. படம் கிளாமர், அடிதடி, எம்.டி.ஆர்.கரம்மசாலா ரகம் தானாம்.

தமிழில் முதலிடத்தைப் பிடிக்கவே மும்பையிலிருந்து பறந்து வந்ததாகக் கூறும் இஷிதா, நடிக்கிறாரோ இல்லையோகாட்ட வேண்டியதை நன்றாகவே காட்டுகிறார். அத்தோடு தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்தவர், இப்போது, நாண்நல்லா தமில் பேசும் என்கிறார்.

டிரஸ் விஷயத்தில் அடம் பிடிக்காமல் சொன்னதைக் கேட்டு நடந்து கொள்வதாக இயக்குனரே ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் கொடுக்கிறார் (ஸ்டில்லை பார்த்தாலே தெரியுது சார்).

இஷிதாவின் கும்மாங்குத்து ஆட்டத்தில், வச்சுக்கிறியா.. கட்டிக்கிறியா.. என்று ஓடிப் போயி கல்யாணந்தான்கட்டிக்கலாமா பாட்டையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் ஒரு பாட்டும் படத்தில் உள்ளதாம். தேவா போட்டுள்ளமியூசிக்கில் இஷிதாவுடன் தியேட்டர் ஆபரேட்டர், டார்ச் பாய்களும் சேர்ந்து ஆடப் போகிறார்கள் என்கிறார்நம்பிராஜ்.

சமீபத்தில், விசாகபட்டினம், மலேசியா என படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அடுத்துஆஸ்திரேலியாவிற்குப் பறக்கவுள்ளது படக் குழு. பிரிஸ்பெர்ன், மெல்போர்ன், சிட்னி என முக்கியநகர்களில் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாம்.

ஹீரோ- வில்லன் கார் சேஸ், படகு சேஸ் போன்ற விறு விறு காட்சிகள் எல்லாம் அங்கு எடுக்கப்போகிறார்களாம். ஹாலிவுட் காமிராமேன் ப்ரைன் எலிசன், லூயி ஹாவர்ட் ஆகியோரைக் கொண்டுஹெலிகாப்டர்கள் உதவியுடன் இந்தக் காட்சிகளை எடுக்கவுள்ளார்களாம்.

ஹாலிவுட் ஸ்டண்ட் ஆசாமியான மாஸ்டர் ரிக் ஆண்டர்சன் தான் இந்த கார், படகு சேஸ்களைஇயக்கவுள்ளாராம்.

ஹீரோவைப் பார்த்தால் படா படா சேஸ் காட்சிகளில் நடிக்கும் அளவுக்கு பாடியும், முகமும் இல்லை.இவரை வைத்து இயக்குனர் ஏன் ரிஸ்க் எடுக்கிறார் என்று புரியவில்லை. இயக்குனரை விடதைரியம் நம் ஸ்ரீதேவிக்கு. ஆமாங்க.. நம்ம பழைய நடிகை ஸ்ரீதேவியே தான். அவர் தான் படத்தின்இணை தயாரிப்பாளர்.

ஐஸ்வர்யா, சீதா, மீரா கிருஷ்ணன், விவேக் தவிர டிம்பிள், மம்தா என இரு புதுமுகங்களும் இதில்நடிக்கின்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil