»   »  சேரன் படத்துக்கு பெரும் சிக்கல்

சேரன் படத்துக்கு பெரும் சிக்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Cheran
புதிய கீதை, கோடம்பாக்கம் ஆகிய படங்களை இயக்கிய ஜெகன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும், சேரன் நாயகனாக நடிக்கும் ராமன் தேடிய சீதை படக் குழுவினருக்கு சோதனை தொடருகிறது.

சேரன் நாயகனாக நடிக்கும் படம் ராமன் தேடிய சீதை. இதன் படப்பிடிப்பு பூதப்பாண்டி அருகே உள்ள ஆண்டித்தோப்பு பகுதியில் நடந்து கொண்டிருந்தது. ஷூட்டிங்கை பார்க்க ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.

இது ஷூட்டிங்குக்கு இடையூறாக இருந்தாலும் சமாளித்து காட்சிகளை சுட்டிக் கொண்டிருந்தார் இயக்குநர் ஜெகன்.

அப்போது அமைச்சர் ஒருவர் தலைமையில் அணிவகுப்பு நடப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. வரிசையாக வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது கடைசியாக வந்த வாகனம் ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பூதப்பாண்டியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி குற்றாலம்மாள் (62) மீது பலமாக மோதி விட்டது.

இதை எதிர்பார்க்காத அந்த காரின் டிரைவர் காரை விட்டு விட்டு ஓடி விட்டார். படுகாயம் அடைந்த குற்றாலம்மாள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இதையடுத்து ராமன் தேடிய சீதை படக்குழுவினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் தான் இந்த ராமன் தேடிய சீதை படக்குழுவினர் கன்னியாகுமரி மாவட்ட டி.ஆர்.ஓ. மனோகரனின் கார் பதிவு எண்ணை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதற்காக கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஷிரு உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தக் காரைப் பறிமுதல் செய்தனர். இயக்குநர் ஜெகன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இப்போது கொலை வழக்கில் சிக்கியுள்ளது ராமன் தேடிய சீதை படக்குழு.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil