»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

நெடுங்காலமாக பிரஷாந்துக்கு படமே வராமல் இருந்து, சமீபத்தில் வின்னர் படம் வெளியானது. படம் படுபிளாப். இளம் ஹூரோக்களில் முதல்முதலான சினிமாவுக்கு வந்தும் பிரஷாந்தால் இன்னும காலுன்ற முடியாததால்,அடுத்தாக தியாகராஜனே தனது மகனை வைத்து பிரம்மாண்டமான செலவில் எடுத்து வரும் படம் தான் ஜெய்.

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருக்கு பெரும் பிரேக் கொடுத்த ஆதி என்ற படத்தின் ரீமேக் தான் ஜெய். பணபலமும், ஆள் பலமும் கொண்ட இரு பயங்கர குரூப்களுக்கு இடையே நடக்கும் மோதல் தான் கதை. தெலுங்கில்ராயலசீமா ரெளடிக் கும்பல்களுக்கு இடையே மோதலைச் சொன்னார்கள். தமிழுக்காக இதை மதுரை ரெளடிகளாகமாற்றியுள்ளார்கள்.

இதில் ஹீரோயினாக அன்சி என்பவர் அறிமுகமாகிறார். ஹாலிவுட் ஹீரோயின் மாதிரி படுகலக்கலாக இருக்கிறார்.

படு ஆக்ஷன் கலந்த காதல் கதை தான் என்றாலும் படத்தை பிரம்மாண்டமாய் எடுக்க முடிடுெத்திருக்கிறார்கள்.இந்தப் படத்துக்காக உடம்பை கட்டுக்கோப்பாக்க ஹாங்காங்கில் பயிற்சி எடுத்துவிட்டுத் திரும்பினார் பிரஷாந்த்.சண்டைக் காட்சிகளை ஒருங்கிணைக்கப் போவது ஜாக்கி சானின் ஸ்டண்ட் டைரக்டரான சாமோ ஹூங். மேலும்மேட்ரிக்ஸ் படத்தின் ஸ்டண்ட் டைரக்டர்களில் ஒருவரான யூ வோ பிங்கின் உதவியையும் நாடியிருக்கிறார்கள்.

பிரசாந்துடன் தியாகராஜனும் முதன் முதலாக சேர்ந்து நடிக்கும் படம் இது. இருவரும் சண்டை போடும் காட்சியும்படத்தில் உள்ளதாம். இதில் தியாகராஜனுக்கு ஜோடியாக பானுப்பிரியா நடிக்கிறார்.

ஏவிஎம் ஸ்டூடியோவில் 2 மாதமாக ரூ.1 கோடி செலவில் கடல் மாதிரி செட் அமைத்து பிரசாந்த், சிம்ரன் மற்றும்மும்பை அழகிகள் ஆடிய ஒரு பாடலை ஏற்கனவே எடுத்துமுடித்துவிட்டார்கள்.

மேலும் சில பாடல்களை இத்தாலி,மெக்சிகோ, வெனிஸ், ஆப்பிரிக்கா நாடுகளிலும் படமாக்கப்பட உள்ளார்களாம்.

ஹைதராபாத்தில் சண்டை காட்சியை 2,000 துணை நடிகர்களை நடிக்க வைத்து எடுத்து முடித்துள்ள நிலையில்இன்னொகு சண்டைக் காட்சியை எடுக்க ஹாங்காங் செல்ல இருக்கிறார்களாம்.

சீதா, ராஜ்கிரணும் நடிக்கும் இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸ். படத்தை இயக்குவது சாக்லேட் படத்தை டைரக்ட்செய்த மாதேஷ்.

ஜெய் படத்துக்குப் பின் பிரஷாந்துக்கு டும்.. டும்.. கொட்டி விடுவதில் தீவிரமாய் இருக்கிறார் தியாகராஜன்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil