»   »  சூட்டிங் ஸ்பாட்டில் பயங்கர தீ-ஜீவா தப்பினார்

சூட்டிங் ஸ்பாட்டில் பயங்கர தீ-ஜீவா தப்பினார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தெனாவட்டு படத்தின் சூட்டிங்கின்போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் நடிகர் ஜீவா உள்ளிட்டவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தெனாவட்டு படத்தின் ஸ்டண்ட் காட்சி சென்னை புழல் பகுதியில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையின் அருகே மர டிப்போவில் நடந்து வருகிறது.

நேற்று சூட்டிங் நடந்து ெகாண்டிருந்தபோது பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த 4 ரசாயண டேங்குகள் வெடித்துச் சிதறின.

இதையடுத்து அந்த ஆலையின் ஊழியர்கள் அலறியபடி ஓடினர். தொழிற்சாலையின் ஒரு பகுதி முழுவதும் தீப் பற்றி எரிந்தது.

தகவல் அறிந்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. பல மணி நேரம் போராடி தீ அைணக்கப்பட்டது. இதில் ஒரு ஊழியர் பலியானார்.

பெயிண்ட் ஆலையில் பற்றிய தீ அருகே படப்பிடிப்பு நடந்த மர டிப்போவிற்கும் பரவியது. மரங்களும் தீப் பிடித்து எரிந்ததன.

இதையடுத்து படப்பிடிப்புக் குழுவினர் கருவிகளை அப்படியே போட்டுவிட்டு சிதறி ஓடினர். மர டிப்போவின் பின் புறம் உள்ள காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து தீயில் இருந்து தப்பினார்.

இதில் ஜீவாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil