»   »  அம்மா இறந்த 2 வாரத்திற்குள் ஷூட்டிங்கிற்கு கிளம்பிய ஜான்வி

அம்மா இறந்த 2 வாரத்திற்குள் ஷூட்டிங்கிற்கு கிளம்பிய ஜான்வி

Posted By:
Subscribe to Oneindia Tamil
அம்மா இறந்த 2 வாரத்திற்குள் ஷூட்டிங்கிற்கு கிளம்பிய ஜான்வி!- வீடியோ

மும்பை: அம்மா இல்லாத கவலையை ஓரங்கட்டிவிட்டு ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி படப்பிடிப்புக்கு கிளம்பிவிட்டார்.

ஸ்ரீதேவி தனது மகள் ஜான்வியை நடிகையாக்கிப் பார்க்க விரும்பினார். ஜான்வி குழந்தையாக இருந்தபோது படத்தில் டாக்டராக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அதை கேட்ட ஸ்ரீதேவி மகளுக்கு நடிப்பில் ஆர்வம் இருப்பதை புரிந்து கொண்டு ஊக்குவித்தார்.

ஜான்வி

ஜான்வி

ஜான்வி ஹீரோயினாக அறிமுகமாகும் படம் தடக். அந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது தான் ஸ்ரீதேவி இறந்த செய்தி ஜான்விக்கு தெரிவிக்கப்பட்டது.

கவலை

கவலை

அம்மா இறந்த சோகத்தில் இருந்த ஜான்வி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். என்ன தான் கவலை இருந்தாலும் தைரியமாக நடிக்க வந்த ஜான்வியை பாலிவுட்காரர்கள் பாராட்டியுள்ளனர்.

பெருமை

பெருமை

பாலிவுட்டில் பெரிய ஆளாகி தனது அம்மாவை பெருமை அடையச் செய்ய வேண்டும் என்பதே ஜான்வியின் ஆசை. அதனால் தான் அதற்கான வேலையில் இறங்கிவிட்டார்.

ஜூலை

ஜூலை

தடக் படம் வரும் ஜூலை மாதம் 6ம் தேதி ரிலீஸாக உள்ளது. மகளை பெரிய திரையில் பார்க்க ஆசைப்பட்ட ஸ்ரீதேவி தடக் ரிலீஸாகும் முன்பே இறந்துவிட்டார்.

English summary
Sridevi's daughter Jhanvi Kapoor has already resumed the shoot of her debut film, Dhadak and the lady was spotted on the sets of the film, in a very pensive mood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil