»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

குஷி படத்துக்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் எத்ர்பாராமல் ஜோடி சேருகிறார் ஜோதிகா. படம் திருமலை.

கே. பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்த சாமி படம் சக்கை போடு போட்டு வரும் நிலையில் அந்நிறுவனம் உற்சாகமாய் எடுத்து வரும் அடுத்த படம் தான் திருமலை. இதில் விஜய்க்கு ஜோடியாக முதலில்பாலிவுட் நடிகை நம்ரதா ஷிரோத்கர் தான் புக் செய்யப்பட்டிருந்தார்.

ஆனால், அவரை நடிக்க வைப்பதற்குள் ரொம்ப கஷ்டபட்டுவிட்டதாம் சூட்டிங் ஸ்பாட் யூனிட். நடிப்பும்வரவில்லை. அத்தோடு டான்ஸ் மூவ்மெண்ட்சும் சரியில்லை.

வெறும் மாடல் மாதிரி போட்டோவுக்கு மட்டுமே போஸ் தரத் தெரிகிறதாம். இதனால் நம்ரதாவை தூக்கிவிடுமாறுவிஜய் சொல்ல, பாலசந்தரும் ஒப்புக் கொள்ள அவர் தூக்கப்பட்டுவிட்டார்.

இப்போது நம்ரதாவின் இடத்தை நிரப்பி இருப்பது ஜோதிகா. ஆனால், முதலிலேயே கூப்பிடாமல் நம்ரதாவுக்குப்பதிலாக தன்னைக் கூப்பிட்டதால் ஜோதிகாவுக்கு நடிக்க விருப்பம் இல்லையாம். பாலசந்தரே போனில் பேசியும்கூட ஜோதிகா சரியான பதில் தரவில்லை.

இதையடுத்து தனது நண்பரான சூர்யாவைத் தொடர்பு கொண்டு விஜய் பேச, இதைத் தொடர்ந்து சூர்யா ரெகமண்ட்பண்ணியதால் நடிக்க ஒப்புக் கொண்டாராம் ஜோதிகா. (ஆமா, சூர்யாவோடு உங்க கல்யாணம் எப்போ ஜோதிகா?)

குழப்பத்தில் பிதாமகன்:

சூர்யா- விக்ரம் நடிக்க பாலா இயக்கி வரும் பிதாமகன் சிக்கலில் இருப்பதாக கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.

சேது, நந்தா என்று இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் பாலாவின் அடுத்த படமான பிதாமகன்பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. விக்ரமின் கால்ஷீட் இழுத்தடிப்பு, தயாரிப்பாளரின் செலவுக்கட்டுப்பாடு என பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் தான் படப் பிடிப்பே தொடங்கியது.

ஆனால், பல மாதங்கள் ஓடிவிட்ட நிலையில் இதுவரை பாதிப்படம் கூட முடியவில்லையாம்.

பாலா ரொம்பவே தாமதம் செய்வதாகவும் இதனால் விக்ரம், சூர்யா ஆகிய இருவரின் கால்ஷீட்களும் வீணாகிக்கொண்டுள்ளதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் புகார் கூறப்படுகிறது. மேலும் தயாரிப்புச் செலவும் பட்ஜெட்டைத்தாண்டி பல வாரங்களாகி விட்டதாம்.

இதனால் தொடர்ந்து படத்துக்கு செலவி செய்வது குறித்து தயாரிப்பாளர் பலமாக யோசித்து வருவதாகதத் தகவல்,

கடைசி நேரத்தில் காட்சிகளை மாற்றுவது, ஷூட்டிங் ஸ்பாட்டையே மாற்றுவது என்று பாலா பலமாகவேகுழப்புகிறாராம். இனிமேலும் படத்தைத் தொடர்ந்து தயாரித்தால் கைக்கு ஏதும் மிஞ்சாது என்று தயாரிப்பாளர்கள்அஞ்சுகிறார்களாம்.

ஆனால், தனக்கு மறுவாழ்வளித்தவர் என்பதால் விக்ரம் இந்த விஷயத்தில் பாலாவுக்கு ரொம்பவே ஒத்துழைப்புகொடுக்கிறாராம். அதே போலத் தான் சூர்யாவும் பாலாவுக்கு முழு ஆதரவாக உள்ளாராம். இதனால் இந்தத்தயாரிப்பாளர் இல்லாவிட்டால் வேறு ஒருவர் நிச்சயம் பாலாவுக்கு உதவுவார்கள் என்கின்றன கோடம்பாக்கம்குருவிகள்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil