»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

சூர்யா- ஜோதிகா நடித்து வரும் பேரழகன் படப்பிடிப்பில் சிக்கல் என்கிறார்கள்.

மலையாளப் படமான குஞ்ஞிக்கூனன் தான் தமிழில் பேரழகனாக உருமாறிக் கொண்டிருக்கிறது. படத்தைதயாரிப்பது ஏ.வி.எம். நிறுவனம். இயக்குனராக யாரைப் போடலாம் என்று பலவாறு யோசித்து இறுதியில்மலையாளத்தில் இயக்கிய சசிசங்கரையே வைத்து படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.

ஆனால், கேரளாவில் சூட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே சூர்யாவுக்கும் இயக்குனருக்கும் ஒத்துவரவில்லைஎன்கிறார்கள். இயக்குனர் சின்னப் பையன் மாதிரி தன்னை நடத்த, கடுப்பான சூர்யா, படத்தின் இணைஇயக்குனரான சிங்கம்புலி மற்றும் கேமராமேனுடன் கைகோர்த்துக் கொண்டு இயக்குனரை டீலில் விட்டுவருகிறாராம்.

இதில் சூர்யாவுக்கு ஜோடி ஜோதிகா என்பது தெரிந்த விஷயம் தானே. அவரும் சூர்யா சொல்வதையே கேட்க,நொந்து போயிருக்கிறார் இயக்குனர் என்கிறார்கள். சூர்யா தரப்பில் நியாயம் இருந்ததால் சசிசங்கருக்குதயாரிப்பாளர் தரப்பில் இருந்து அட்வைஸ் தரப்பட்டுள்ளதாம்.

இன்னொரு விஷயம் தெரியுமா..? தமிழில் இப்போது அதிகமாக சம்பளம் வாங்குவது ஜோதிகாதான். அவரதுசம்பளம் ரூ. 35 லட்சமாம்!. செனனை போட் கிளப் பகுதியில் பல கோடியில் பிரம்மாண்டமான வீட்டையும் கட்டிக்கொண்டிருக்கும் ஜோ, இந்த ஆண்டு சூர்யாவுடன் டும்..டும்..கொட்டிவிடுவார் என்று கோடம்பாக்கத்தில் பேச்சுஇருக்கிறது.

ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கும் விதத்தில் ஏகப்பட்ட படங்களுக்கு அட்வான்ஸை வாங்கிக் கொண்டுகால்ஷீட் புக்கை நிரம்பி வழிய வைத்துக் கொண்டிருக்கிறார் ஜோதிகா.

அதே நேரத்தில் இருவர் மீதும் இருவர் வீட்டிலும் ஏகத்துக்கும் சந்தேகத்துடன் தான் உள்ளனராம். குறிப்பாகஜோதிகாவை நம்ப அவரது தாயார் தயாராக இல்லை. இதனால் சூட்டிங் ஸ்பாட்டில் ஜோதிகாவுடன் அடிக்கடிஆஜராகிவிடுகிறார்.

படப்பிடிப்பில் இருவரும் கொஞ்சிக் குலாவுவது, கடலைபோடுவது எல்லாம் கிடையாது. இருவருமே பக்காவானதூரத்தை மெயின்டெய்ன் பண்ணுகிறார்கள். அதிலும் பொது விழாக்களில் இருவரும் பேசிக் கொள்வது கூடஇல்லை. கண்களால் ஒரு பார்வைப் பறிமாற்றத்துடன் நின்று கொள்கிறார்கள்.

இதனால் இந்த இருவரையும் பார்த்து கோடம்பாக்கம் குருவிகள் மண்டை காய்ந்து போய் அலைகின்றன.கேமராவுக்கு அப்பாலும் நன்றாகவே நடிக்கும் இந்த இருவரும் தங்களை முடிச்சுபோட்டு வரும் செய்திகளுக்குபெப்பே காட்டியபடி இருக்கிறார்கள்.

ஆயுத எழுத்து:

இந் நிலையில் மணிரத்னத்தின் ஆயுத எழுத்து படத்தில் 3 ஹீரோக்களில் ஒருவராக நடிக்கும் சூர்யா,அடுத்ததாகவும் 3 ஹீரோ சப்ஜெக்டில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம். ஆயுத எழுத்தில் சூர்யா -மீராஜாஸ்மின், மாதவன் - த்ரிஷா, சித்தார்த்- ஈஷா தியோல் ஜோடிகள் நடித்து வருகின்றன. இவர்களுடன் முக்கியமாறுபட்ட வில்லன் வேடத்தில் இயக்குனர் பாரதிராஜாவும் நடிப்பது தெரிந்த செய்தி தானே.

அடுத்ததாக தனுசின் அண்ணன் செல்வராகவன் இயக்கும் காசிமேடு என்ற படத்தில் சூர்யா, தனுஷ், ஜெயம் படஹீரோ ரவி ஆகியோர் சேர்ந்து நடிக்கப் போகிறார்களாம். பிற ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்க சூர்யா எந்தபிகுவும் செய்யவில்லையாம். கதையைக் கேட்டவுடன் ஓ.கே. சொன்னாராம்.

காக்க.. காக்க.., பிதாமகனுக்குப் பின் தனக்கு ஏகத்துக்கும் மவுசு ஏறியிருந்தாலும் அதையெல்லாம் தலையில்ஏற்றிக் கொள்ளாமல் மிக நிதாதனமாகவே இருக்கும் சூர்யாவை கோடம்பாக்கத்தில் ரொம்பவே பாராட்டுகிறார்கள்.

கீப் இட் அப் மேன்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil