»   »  சந்திரமுகி: ஜோவுக்கு அரை கோடி!

சந்திரமுகி: ஜோவுக்கு அரை கோடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சந்திரமுகியில் பிரபுவுடன் வரும் காட்சிகளில் நடிக்க 10 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்தாராம் ஜோதிகா.

சிம்ரனைக் கடாசி விட்டு சந்திரமுகியில் ஜோதிகாவை போட்டுள்ளார்கள் என்பது பழைய செய்தி. பிரபுவுக்கு ஜோடியாக ஜோதிகாஇதில் நடிக்கிறார்.

மனதுக்குப் பிடித்த சூர்யாவுடன் அவர் தற்போது மாயாவி படத்திலும் நடித்து வருகிறார். சந்திரமுகிக்காக மாயாவி கால்ஷீட்தேதிகளில் சிரமப்பட்டு மாற்றத்தை செய்துள்ள அவர் அதில் 10 நாட்களை எடுத்து சிவாஜி பிலிம்ஸுக்கு தாரை வார்த்தாராம்.

இந்த அவகாசத்துக்குள் பிரபுவுடனான தனது காட்சிகளை எடுத்து முடித்துவிடுமாறும் சொல்லியிருக்கிறார் ஜோதிகா.

ஆனால் இவ்வளவு குறுகிய காலத்தில் காட்சிகளை முடிப்பது சாத்தியமில்லை, கூடுதல் டேட்ஸ் வேண்டும் என்று அவரிடம்சிவாஜி பிலிம்சாரும் இயக்குனர் வாசும் சொல்ல, அதிக நாள் கால்ஷீட் வேண்டுமானால் எனக்கு இவ்வளவு சம்பளம் வேணும்என்று 5 விரல்களையும் விரித்துக் காட்டினாராம் ஜோதிகா.

மிகவும் யோசித்துப் பார்த்துவிட்டு வேறு வழியில்லாததால் அந்த பெரிய சம்பளத்துக்கு தலையை ஆட்டினார்களாம் சிவாஜிபிலிம்ஸ் தரப்பினர்.

ஜோ கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமோ...? ரூ. 50 லட்சம், ஜென்டில்மென் !. ஜோதிகா இதுவரை வாங்கிய சம்பளத்திலேயேஇது தான் அதிகபட்சம் என்கிறார்கள்.

மலையாளத்தின் மணிச்சித்திரத்தாழ் படக் கதையைத் தான் பி.வாசு உல்டா செய்து சந்திரமுகி என்று எடுத்து வருகிறார்.

இந் நிலையில் என் அனுமதியில்லாமல் கதையை பயன்படுத்திய வாசு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளேன் எனமிரட்டல் விடுத்திருக்கிறார் மணிச்சித்திரத்தாழ் படத்தின் கதாசிரியரான மதுமுட்டம்.

என் மணிச்சித்திரத்தாழ் கதையை சுட்டுத் தான் கன்னடத்தில் ஆப்தமித்ராவாக எடுத்தார் வாசு. இப்போது அதையே தமிழில்சந்திரமுகியாக தயாரிக்கிறார். கேட்டால் கன்னடக் கதையை எடுக்கிறோம் என்று கதை விடுகிறார் வாசு என்கிறார் மது.

இது குறித்து வாசுவிடம் கேட்டால்,

இதுவரை 5 பிறமொழிப் படங்களை தமிழில் எடுத்திருக்கிறேன். மணிச்சித்திரத்தாழ் படத்தை அதன் தயாரிப்பாளர் அப்பச்சனிடம்இருந்து பணம் கொடுத்து வாங்கித் தான் கன்னடத்தில் ஆப்தமித்ராவாக எடுத்தேன். அப்போதே கதையை முழுவதுமாகமாற்றிவிட்டேன். இருந்தும் நூறு நாட்கள் ஓடியது.

இப்போது ஆப்தமித்ராவில் இருந்து ஒரே ஒரு வரிக் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு சந்திரமுகியை தயாரிக்கிறோம். மற்றபடிமுழுக் கதையும் மீண்டும் மாற்றப்பட்டுவிட்டது. கிளைமாக்ஸ் கூட மாற்றியாகிவிட்டது. ரஜினியையும் சிவாஜிபுரொடக்ஷன்சையும் வைத்துக் கொண்டு நான் பித்தலாட்டம் செய்ய முடியுமா?

சந்திரமுகியை திருடிய கதை என்று யாராவது சொன்னால் சிரிப்புத்தான் வருகிறது என்கிறார் பி.வாசு.

மது சேட்டா!, உங்களுக்கு சிரிப்பு வரலை?

என்னாது... அழுகை வருதா !!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil