Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கமல் பாணியில் விஜய் சேதுபதி.. கூட யாருன்னு பாருங்க.. தீயாய் பரவும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி கமல் பாணியில் பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.
ஆளுநர்
பதவி
அக்காவுக்கு
உறுதி..
பிரபல
நடிகையின்
ட்ரான்ஸ்ஃபர்மேஷனை
பார்த்து
பிரமிக்கும்
ஃபேன்ஸ்!
எந்த கதாப்பாத்திரம் என்றாலும் தனது எதார்த்தமான நடிப்பால் பட்டையை கிளப்பி வருகிறார்.

பல மொழிகளில் செம பிஸி
இதனாலேயே ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் செம பிஸியாக உள்ளார். கைவசம் 10க்கும் மேற்பட்ட படங்களை வைத்துள்ளார் விஜய் சேதுபதி.

யார் வில்லன் என்று தெரியவில்லை
தற்போது கமலின் விக்ரம் படத்திலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மலையாள நடிகர் ஃபகத் பாசில் ஆகியோர் நடிக்கின்றனர். இதில் யார் வில்லன் யார் ஹீரோ என்பது இன்னமும் உறுதியாகவில்லை.

பேருந்தின் படிக்கட்டில் விஜய் சேதுபதி
சென்னையில் கடந்த மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தள போட்டோக்களும் வெளியாகி லைக்ஸ்களை குவித்தது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்யும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.

காத்து வாக்குல ரெண்டு காதல்
இந்தக் காட்சி காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் எடுக்கப்பட்டது. இந்த வீடியோவில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். படப்பிடிப்பின் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

ஒரே நிற சேலை ஒரே நிற ஜாக்கெட்
இதில் பேருந்தின் படிக்கட்டில் நடிகைகள் சமந்தாவும் நயன்தாராவும் நிற்க அவர்களுக்கு பின்னால் விஜய் சேதுபதி என மூன்று பேரும் வரிசையாக கடைசி படியில் பயணம் செய்கின்றனர். இருவரும் ஒரே நிற சேலை ஒரே நிற ஜாக்கெட் அணிந்துள்ளனர்.
#VijaySethupathi #Nayanthara & #Samantha from #KaathuVaakulaRenduKaadhal shooting spot#Vigneshshivan pic.twitter.com/NAx1jHSf6P
— Rana (Tha_rana) August 23, 2021
வளையோசை கலகல பாடல் ஒலிக்க
விஜய் சேதுபதி வெள்ளை நிற சட்டை கறுப்பு பேண்ட் ஷூட் அணிந்துள்ளார். பின்னணியில் கமலின் சத்யா படத்தில் இடம்பெற்ற வளையோசை கலகல பாடல் ஒலிக்க, அந்தப் படத்தில் இடம் பெற்ற காட்சியை போன்றே காட்சியாக்கப்படுகிறது.

செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இந்த காட்சியை ரசிகர்கள் சிலர் செல்போனில் எடுத்து இணையத்தில் ஷேர் செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்குகிறார்
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விக்னேஷ் சிவன், நயன்தாரா, லலித் குமார் ஆகியோர் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.