»   »  தொடங்கியது கபாலி இறுதிக்கட்டப் படப்பிடிப்பு... ஏப்ரலில் இசை வெளியீடு!

தொடங்கியது கபாலி இறுதிக்கட்டப் படப்பிடிப்பு... ஏப்ரலில் இசை வெளியீடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு இன்று மலேசியாவில் தொடங்கியது.

கலைப்புலி தாணு தயாரிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படம் கபாலி. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.


120 நாட்கள்

120 நாட்கள்

இந்தப் படத்துக்காக 120 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார் ரஜினி. முதல் மூன்று கட்டப் படப்பிடிப்பு சென்னை, மலேசியா, மீண்டும் சென்னையில் நடந்து முடிந்தது.


மீண்டும் மலேசியா

மீண்டும் மலேசியா

இப்போது இறுதிக் கட்டப் படப்பிடிப்புக்காக கபாலி குழுவுடன் மீண்டும் மலேசியா சென்றுள்ளார் ரஜினி. முன்பு எடுக்கப்பட்ட சில காட்சிகளை ரீஷூட் பண்ணவும் திட்டமிட்டுள்ளனர்.


தொடங்கியது

தொடங்கியது

நேற்று முன்தினம் சென்னையிலிருந்து மலேசியா சென்ற ரஜினி, இன்று படப்பிடிப்பில் பங்கேற்றார். அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.


இந்த மாதம் முடியும்

இந்த மாதம் முடியும்

கபாலி படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முழுமையாக முடிவடையும் எனத் தெரிகிறது. மார்ச் மற்றும் ஏப்ரலில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


ஏப்ரலில் இசை

ஏப்ரலில் இசை

மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் மாதம் கபாலி படத்தின் இசை மலேசியாவில் வெளியாகும் என்று தெரிகிறது.


English summary
The final schedule of Rajinikanth's Kabali shooting is beginning today at Malaysia.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil