»   »  மலேசியா புறப்பட்டார் 'கபாலி'!

மலேசியா புறப்பட்டார் 'கபாலி'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கபாலி படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காக இன்று மலேசியா புறப்பட்டுச் சென்றார் ரஜினிகாந்த்.

கலைப்புலி தாணு தயாரிப்பில், ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் கபாலி படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கடந்த மாதம் தொங்கி 30 நாட்களுக்கும் மேல் சென்னையில் நடந்தது.


அடுத்த கட்டப் படப்பிடிப்பு மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் நடக்கவிருக்கிறது. கோலாலம்பூர், மலாக்கா, பினாங்கு உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிகிறது.


'Kabali' off to Malaysia

படப்பிடிப்பு நடைபெற உள்ள அனைத்து இடங்களுக்கும் முறைப்படி அனுமதி பெறப்பட்டுள்ளது.


ஏற்கெனவே சென்னையில் படப்பிடிப்பு நடந்தபோது, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளின் தெருக்கள் செட்போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியான காட்சிகள்தான் இப்போது மலேசியா, தாய்லாந்தில் படமாக்கப்பட உள்ளன.


இன்னும் ஒரு மாதம் ரஜினிகாந்த் மலேசியாவில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.

English summary
Rajinikanth has flew to Malaysia for attending Kabali shooting from Today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil