»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

காதல் தோல்வி.. அதைத் தொடர்ந்து தற்கொலை முயற்சி என பரபரப்பாக பேசப்பட்டு, அதனால் சிலவாய்ப்புக்களையும் இழந்த கஜாலா இப்போது மீண்டும் பிஸி. தெலுங்கில் முன்னணிக்கு வந்து கொண்டிருந்தகஜாலாவுக்கு அந்த பரபரப்புகளால் சரிவு ஏற்பட்டது. அதனால் தமிழில் புக் ஆன சில படங்களும் காலியாயின.

இப்போது காதல் விவகாரத்தில் இருந்து வெளியே வந்து மீண்டும் சுறுசுறுப்பாகிவிட்ட கஜாலா வசம் இரண்டுதமிழ்ப் படங்கள்.

சத்யராஜின் மகன் சிபியுடன் ஜோர் என்ற படத்திலும் குறும்பு பட நாயகன் நரேசுக்கு ஜோடியாக லவ் கேம்என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

லவ் கேமில் பிரபுதேவாவும் இருக்கிறார். அவருக்கு ஜோடி அனிதா

ஜோர் படத்தில் சத்யராஜூம் நடித்துக் கொண்டிருக்கிறார். தனது மகனை சினிமாவில் நிலை நிறுத்த இந்தப்படத்துக்கு பினாமியாக அவர் தான் பைனான்சும் பண்ணுவதாக சொல்கிறார்கள். இதில் கல்லூரி மாணவியாகவரும் கஜாலாவுக்கு கச்சை கட்டிக் கொண்டு கவர்ச்சி காட்டுவதே வேலை. அதை சரியாக செய்துகொண்டிருக்கிறார்.

லவ் கேம் படத்தைப் பொறுத்தவரை, சின்ன வயது தோழியை வாலிப வயதில் சந்திக்கும் ஒருவன் அவளையேகைப்பிடிக்க முயல்கிறான். ஆனால் தனது நண்பனும் அவளையே விரும்புகிறான் என்பது தெரிய வருகிறது. பின்புஅவளைக் கைப்பிடிப்பதற்காக செய்யும் முயற்சிகள்.. இது தான் கதை.

காதல் கதை போலத் தெரிந்தாலும் நகைச்சுவைக்கு அதிக முக்கியவத்துவம் கொடுத்து எடுத்து வருகிறார்கள். இதில்கஜாலாவைப் போலவே தெலுங்கு தேசத்தில் இருந்து வந்திருக்கும் (பூர்வீகம் என்னவோ கேரளம் தான்)அனிதாவுக்கும் இடையே முக்கியத்துவம் பெறுவதில் போட்டி நடக்கிறதாம்.

அனிதாவுக்கு பி.தேவாவின் ஆசிர்வாதம் இருப்பதால் பாடல் காட்சிகளில் கஜாலாவை விட அதிகமாகவேஎக்ஸபோஸ் செய்ய வைத்து அவருக்கு ஆறுதல் தந்துள்ளாராம்.

படத்தை அடுத்த மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளதால் வேகமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ஜோர் படத்தைப் பொறுத்தவரை ரொம்ப நாட்களாகவே சூட்டிங் நடக்கிறது. எப்போது ரிலீசோ தெரியவில்லை.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil