»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காக்க.. காக்க... வெற்றிப் படத்தைத் தந்த இயக்குனர் கெளதம் தெலுங்கில் நுழைகிறார். காக்க... காக்க.. மூலம்சூர்யாவுக்கு மிகப் பெரிய பிரேக்கும், தயாரிப்பாளர் தாணுவுக்கு பண மழையும் கொட்டச் செய்த கெளதமுக்கு தெலுங்கில் இருந்துஏகப்பட்ட அழைப்புகளாம்.

கோடி தருகிறேன். 2 கோடி தருகிறேன் என்று தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், தாணுவே தெலுங்கில் இந்தப் படத்தை எடுக்கப் போகிறார். இதையடுத்து அவருக்கே மீண்டும் இந்தப் படத்தைதெலுங்கில் எடுத்துத் தரப் போகிறார் கெளதம்.

சூர்யா செய்த ரோலைச் செய்யப் போவது வெங்கடேசாம். இசை அதே ஹாரிஸ் ஜெயராஜ் தானாம்.

இதை முடித்துவிட்டு இதே படத்தை இந்தியிலும் இயக்கப் போகிறார் கெளதம். ஹீரோவாக பெரோஸ் கானின் மகன் பர்தீன்நடிக்கிறார்.

சூர்யா இயக்கத்தில் பாக்யராஜ்?

ஜே. சூர்யா இயக்கி வரும் நியூ படத்தில் இன்னும் ஒருவர் சேரவுள்ளார்.

சிம்ரன், கிரண் என கவர்ச்சி கலக்கல்களுடன் சூர்யா இயக்கி வரும் நியூ படம் ரொம்ப மெதுவாகவே வளர்ந்து கொண்டிருக்கிறது.இப்போது பாக்யராஜையும் தனது படத்தில் போடவுள்ளாராம் சூர்யா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil