»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

கலைப்புலி தாணு தயாரிப்பில் கமல் நடித்து வரும் ஆளவந்தான் முடிவுறும் நிலையில் உள்ளது. இதில் கமல் 2வடக்கத்திய கிளிகளை வைத்து விளையாடி இருக்கிறார் என்பது தெரிந்த விஷயம்.

இப்படம் பூஜை போட்ட அன்றே பல கோடிகளுக்க விற்றுத் தீர்ந்ததைத் தொடர்ந்து, தாணுவின் அடுத்த படத்திற்குவெள்ளிக்கிழமை பூஜை போடப் பட்டது.

முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கவுள்ள இப்படத்தின் பெயர், "என்ன சொல்லப் போகிறாய்".

இதில் கமல் கலந்து கொண்டு படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார். இப்படத்தை எழுதி, இயக்குபவர் பிரபலகதாசிரியர் ரத்னகுமார்.

படத்தில் சாய்கிரன், நந்தா என்று 2 ஹூரோக்கள்.

ஹூரோயின் காயத்ரி. இவர் டான்ஸ் மாஸ்டரும் கமலின் நண்பருமான ரகுராமின் தவப்புதல்வி.

இசை இளம் புயல் யுவன் சங்கர்ராஜா.

தலைப்பு எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதா? கலைப்புலி தாணுவின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்படத்தில் வைரமுக்கு எழுதிய பாடல் தான் என்ன சொல்லப் போகிறாய்...

படம் என்ன சொல்லப் போகுதோ!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil