»   »  கமல், இன்னும் ரெண்டுக்கு வலை!

கமல், இன்னும் ரெண்டுக்கு வலை!

Subscribe to Oneindia Tamil

தசாவதாரம் படத்தில் நடிப்பதற்காக முன்னணி நடிகைகள் இருவரை அணுகியுள்ளார்களாம்.

கலைஞானி கமல்ஹாசன் 10 வேடங்களில் அசத்தலாக நடித்து வரும் படம் தசாவதாரம். இப்படத்தில் 8 கேரக்டர்களுக்குரிய காட்சிகளை முடித்து விட்டார்களாம்.

இன்னும் 2 கேரக்டர்களைப் படமாக்க உள்ளதாம். இந்த கேரக்டர்களுக்கான கெட்டப் சேஞ்சுக்கு நீண்ட நேரம் பிடிக்கும் என்பதால் மிக மிக நிதானமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இப்படத்தில் ஆசின், ஜெயப்பிரதா, மல்லிகா ஷெராவத் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். இதில் ஆசினுக்கு மட்டும் இரண்டு கேரக்டர்கள். இவர்கள் தவிர மேலும் இரண்டு நாயகிகளைப் போடவுள்ளனராம்.

இந்த வேடத்திற்காக உள்ளூரிலேயே ஆட்களைப் பார்த்து வருகிறார்களாம். இரண்டு முன்னணி நடிகைகளை இதற்காக கமல் தரப்பு அணுகியுள்ளதாம். இதுவரை அவர்களிடமிருந்து பாசிட்டிவ்வான தகவல் இல்லையாம்.

நடிக்க பெரும் ஆவல் இருந்தாலும் கூட, கால்ஷீட் பிரச்சினை காரணமாக உடனடியாக ஓ.கே. சொல்ல முடியாமல் தவிக்கிறார்களாம் இருவரும். இருந்தாலும் எப்படியாவது கால்ஷீட்டை தளர்த்திக் கொண்டு கமலுடன் இணைந்து நடித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளார்களாம் இருவரும்.

யார் அந்த நாயகிகள் என்பது தசாவதாரம் பட யூனிட்டுக்கேத் தெரியாதாம். கமல், இயக்குநர் ரவிக்குமார் ஆகியோருக்கு மட்டுமே அவர்கள் யார் என்பது தெரியுமாம்.

கமலுடன் கலக்கப் போவது யாரோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil