»   »  கமல்ஹாசனின் சுனாமி

கமல்ஹாசனின் சுனாமி

Subscribe to Oneindia Tamil

தசாவதாரம் படத்திற்காக கடலோரத்தில் செட் போட்டு சுனாமியால் பாதிக்கப்பட்டது போன்ற பகுதியை பிரமாண்டமாக உருவாக்கி அசத்தி வருகிறார்களாம்.

கமல்ஹாசன் 10 வேடங்களில் நடிக்க உருவாகி வரும் படம் தசாவதாரம். படத்தின் முக்கால்வாசி காட்சிகளை ஷூட் செய்து முடித்து விட்டனர். மீதமுள்ள காட்சிகளை சென்னையில் வைத்து சுடவுள்ளனர்.

அதில் முக்கியமான ஒரு காட்சி சுனாமி. இந்தக் காட்சியை தத்ரூபமாக கொண்டு வர வேண்டும் என்பதற்காக சென்னை ராயபுரம் அருகே கடலோரத்தில் பிரமாண்ட செட் போட்டு எடுக்கவுள்ளனர்.

கடலையே செட் போட்டு படம் பிடிக்கவுள்ளனராம். இதுவரை இப்படி ஒரு கடல் செட் இந்திய சினிமா வரலாற்றில் போடப்பட்டதில்லை என்கிறார்கள். தோட்டாதரணியின் கைவண்ணத்தில் இந்த கடல் செட் போடப்படுகிறது.

பரிந்து விரிந்த கடல், சுனாமியால் சேதமடைந்த வீடுகள் போல செட் போடப்படுகிறதாம். இந்தப் பணி படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இங்கு படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாம். படத்தின் மிகவும் முக்கியமான ஹைலைட்டான காட்சியாக இது இருக்குமாம்.

இதுதவிர மேலும் சில காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. அதை முடித்து விட்டால் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெறுமாம்.

அனைத்துப் பணிகளையும் முடித்து வருகிற தீபாவளியன்று தசாவதாரத்தை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனராம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil