»   »  கமல் புஷ் - அசந்த ரஜினி!!

கமல் புஷ் - அசந்த ரஜினி!!

Subscribe to Oneindia Tamil

கலைஞானி கமல்ஹாசன், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கெட்டப்பில் தோன்றியதை நேரில் பார்த்து அசந்து போய் கட்டிப் பிடித்துப் பாராட்டினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ரஜினியின் சிவாஜி அலை மெல்ல மெல்ல நிலைக்கு வந்து கொண்டுள்ள நிலையில், அடுத்த பேரலை எழும்பத் தொடங்கியுள்ளது - தசாவதாரம் மூலமாக.

சிவாஜியைப் போலவே கமல்ஹாசனின் தசாவதாரம் படமும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தினசரி தசாவதாரம் தொடர்பான செய்திகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன.

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் பிரமாண்ட படைப்பான தசாவதாரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 10 வேடங்களில் பட்டையைக் கிளப்புகிறார் கமல்.

இந்த நிலையில் இப்படத்துக்காக கமல்ஹாசன், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கெட்டப்பில் தோன்றும் காட்சியை சென்னை எம்.ஜி.ஆர். பிலிம்சிட்டியில் படமாக்கினர். இதற்காக அங்கு அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை போல பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது.

தோட்டா தரணியின் கைவண்ணத்தில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அப்படியே இடம் பெயர்ந்து வந்து விட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அச்சு அசலாக வெள்ளை மாளிகையை செட் போட்டு அசத்தியுள்ளார் தரணி.

இங்குதான் நேற்று கமல்ஹாசன், புஷ் கெட்டப்பில் கலந்து கொண்ட காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக நேற்று அதிகாலையிலேயே கமல்ஹானுக்கு புஷ் கெட்டப்புக்கான மேக்கப் தொடங்கியதாம். வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட 3 மேக்கப் கலைஞர்கள் கமலை புஷ்ஷாக்கினர்.

எல்லாம் முடிந்து, கமல் மறைந்து, புஷ்ஷாக மாறிய கலைஞானி, 9 மணிக்கு செட்டுக்கு வந்தபோது அத்தனை பேரும் அசந்து விட்டனராம். இந்தத் தகவல் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் எட்டியது.

அவ்வளவுதான், ஆர்வம் தாங்க முடியாமல் தனது தோழன், புஷ்ஷாக மாறியதை நேரடியாகக் காண விரும்பி, வீட்டிலிருந்து கிளம்பி செட்டுக்கு வந்து விட்டார் ரஜினி.

முதலில் வெள்ளை மாளிகையைப் பார்த்து வியந்த அவர், பிறகு புஷ்ஷை சந்தித்தார். முதலில் தனது கண்களையே தன்னால் நம்பவே முடியவில்லையாம் ரஜினி. நம்ம கமலா இது என்று வாய் விட்டுக் கூறிய ரஜினி, அப்படியே ஆரத் தழுவிப் பாராட்டினாராம்.

பிறகு கமலுடன் அரை மணி நேரம் அமர்ந்து அந்த கெட்டப் குறித்து பேசினாராம் ரஜினி. அதன் பிறகே அங்கிருந்து கிளம்பியுள்ளார். பிறகு காட்சியைப் படமாக்கினராம்.

ரஜினி மட்டுமல்லாமல் அமெரிக்க துணைத் தூதர் டேவிட் ஹாப்பரும் வெள்ளை மாளிகை செட்டைப் பார்க்க ஆவலோடு வந்திருந்தாராம். நிஜமான வெள்ளை மாளிகை போலவே இருக்கிறது என்று வாய் விட்டுப் பாராட்டினாராம் ஹாப்பர்.

சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு சினிமா விழாவில் பங்கேற்க வந்த ஹாப்பரிடம், கமல்ஹாசன் வெள்ளை மாளிகை செட் போட்டுள்ளோம். வந்து பாருங்கள் என்று அழைப்பு விடுத்தாராம்.

அதையடுத்தே ஹாப்பர் திரைப்பட நகருக்கு வந்து அதைப் பார்த்து பிரமித்தார். அவருடன் தூதரக அதிகாரிகள் சிலரும் கூட வந்திருந்தனர்.

வெள்ளை மாளிகையை செட் போடுவதற்காக நிஜமான வெள்ளை மாளிகையின் சில படங்களை அமெரிக்க தூதரகம் தந்து உதவியதாம்.

இந்த வெள்ளை மாளிகையில், நேற்று தொடங்கிய படப்பிடிப்பு இன்று வரை நீள்கிறது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil