»   »  தசாவதாரத்துக்கு போட்டா போட்டி!

தசாவதாரத்துக்கு போட்டா போட்டி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தசாவதாரம் ஃபீவர் உச்சத்தை எட்டத் தொடங்கியுள்ளது. கலைஞானியின் இந்த சாதனைப் படம் குறித்த லேட்டஸ்ட் நியூஸ் - ஒரு காட்சியில் பத்து கமல்ஹாசன்களும் சந்திப்பது போல காட்சி இடம் பெறுகிறதாம்.

உலகத் திரை வரலாற்றிலேயே முதல் முறையாக கமல்ஹாசன் 10 வேடம் புனைந்து நடித்து வரும் தசாவதாரத்தின் ஷூட்டிங் வேகம் பிடிக்கத் தொடங்கியுள்ளது. படத்தின் முக்கால்வாசிப் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் கிளைமேக்ஸ் காட்சிக்காக கமல், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் யூனிட்டார் ரெடியாகிக் கொண்டிருக்கின்றனர்.

கிலைமேக்ஸ் காட்சிக்காக சென்னை நகரிலும், வெளியிலுமாக ரூ. 7.5 கோடியில் பிரமாண்ட செட்கள் போடப்பட்டுள்ளனவாம்.

இப்படத்தில், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், துறவி, நீக்ரோ பழங்குடி, சோழ மன்னன், சாப்ட்வேர் என்ஜீனியர் என 10 விதமான கேரக்டர்களில் கமல் நடிக்கிறார்.

ரூ. 50 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் தீபாவளிக்குத் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி படு விறுவிறுப்பாக இருக்குமாம். அதாவது அக்காட்சியில் 10 கமல்ஹாசன்களும் ஒரே ஷாட்டில் வருவது போல படமாக்கியுள்ளனராம்.

சென்னை அருகே முட்டுக்காட்டில் போடப்பட்ட பிரமாண்ட செட்டில் இந்தக் காட்சியை படமாக்கியுள்ளனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த நவராத்திரி படத்தின் கிளைமேக்ஸ் காட்சியிலும் 9 விதமான சிவாஜியும் ஒரே ஷாட்டில் வருவது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே படத்தின் வியாபாரம் குறித்த வேலைகள் தெடாங்கி விட்டனவாம். படத்திற்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாம். குறிப்பாக சென்னை நகர விநியோக உரிமையை வாங்க பலரும் போட்டியிடுகின்றனராம். சிவாஜி பட உரிமையை வாங்கிய அபிராமி ராமநாதனும் அதில் ஒருவர்.

ஆனால் படத்தைத் தயாரித்து வரும் ஆஸ்கர் ரவிச்சந்திரனே சென்னை நகர விநியோக உரிமையை வைத்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil