»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல்ஹாசனின் பெயரை வைத்து அவர் முஸ்லீம் தீவிரவாதியாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட கனடா விமானநிலைய அதிகாரிகள், அவரை கேள்விகள் கேட்டு குடைந்து எடுத்து விட்டனர்.

தன்னுடைய லேட்டஸ்ட் காமெடிப் படமான "பஞ்சதந்திரம்" படத்திற்காகக் கடந்த மாதம் சிம்ரனுடன் பறந்த கமல்,கனடாவிலேயே இந்த ஒரு மாதமும் இருந்து ஷூட்டிங்கை முடித்து விட்டு நேற்று மும்பை திரும்பினார்.

கனடாவின் டொரான்டோ விமான நிலையத்தில் போலீசாரிடம் தான் பட்ட பாட்டை அப்போது அவர்நிருபர்களிடம் கூறியதாவது:

மேக்கப்பை மாற்றுவதற்காக கனடாவிலிருந்து அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்சுக்கு செல்வதற்காகடொரான்டோ விமான நிலையத்திற்குச் சென்றேன்.

அப்போது விமான நிலைய அதிகாரிகள் என்னைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். என்னுடைய பெயர் முஸ்லீம்பெயர் போல இருக்கிறதே என்று கூறிய அதிகாரிகள் நான் போகும் இடம் குறித்தும் எதற்காகப் போகிறேன்என்றும் விசாரித்தனர்.

நான் ஒரு நடிகன் என்றும், கனடாவில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு மேக்கப்புக்காகத் தற்போது லாஸ் ஏஞ்சல்சுக்குப்போய்க் கொண்டிருப்பதாக நான் கூறினேன். உடனே அவர்கள் நான் அங்கே அமைதியைக் குலைப்பதற்காகத்தான்போய்க் கொண்டிருப்பதாகக் கூறினர்.

பின்னர் "பஞ்சதந்திரம்" படத்தின் தயாரிப்பாளர் குறித்தும், விமான டிக்கெட்டுகளுக்கு யார் பணம் கொடுக்கிறார்கள்என்றும், இதற்கான பில்களையும் வேறு சில ஆவணங்களையும் கேட்டு அவர்கள் என்னைத் துளைத்து எடுத்துவிட்டனர்.

படத்தின் தயாரிப்பாளருக்கு செல்போன் பண்ண நான் அனுமதி கேட்டபோது, அதற்கும் அந்த அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அதன் பின்னர் அவர்கள் என்னை அரை மணி நேரம் என்னை ஒரு தீவிரவாதி போலத்தான்விசாரித்தனர்.

சினிமா ஷூட்டிங்கிற்காகத்தான் நான் கனடாவிற்கு வந்தேன் என்று நான் கூறியதை அந்த அதிகாரிகள் தவறாகஎடுத்துக் கொண்டு, ஷூட்டிங்குக்காகத்தான் லாஸ் ஏஞ்சல்ஸ் போய்க் கொண்டிருக்கிறேன் என்று நான் கூறியதாகக்கூறி என்னைக் குழப்பி விட்டார்கள்.

இல்லை. கனடாவில் சினிமா ஷூட்டிங்கை முடித்து விட்டு நான் மேக்கப்புக்காகத்தான் லாஸ் ஏஞ்சல்ஸ் போய்க்கொண்டிருக்கிறேன் என்று திருத்திக் கூறினேன்.

அப்படியானால், அமெரிக்காவில் மேக்கப்பை முடித்துக் கொண்டு இந்தியாவில் போய் ஷூட் பண்ணப்போகிறீர்களா என்று மீண்டும் கோபத்துடன் என்னை அந்த அதிகாரிகள் கேட்டனர்.

பிறகு நான் பொறுமையாக அவர்களிடம் "பஞ்சதந்திரம்" படத்தில் வரும் வித்தியாசமான மேக்கப்புகளைப் பற்றிவிளக்கிக் கூறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

பின்னர் ஒரு வழியாக அமெரிக்காவில் உள்ள என் நண்பர்கள் மூலம் போனில் பேசி நிலைமையைச் சமாளித்தேன்.அதன் பிறகே நான் விமானத்தில் ஏறுவதற்கு அந்த அதிகாரிகள் சம்மதித்தனர் என்று சிரித்துக் கொண்டே முடித்தார்கமல்.

சமீபத்தில்தான் "லகான்" படத்திற்காக ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளச் சென்ற இந்தி நடிகர்அமீர்கானை, சிகாகோ விமான நிலைய அதிகாரிகள் "செமையாக" விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil