»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

தேனி மாவட்டத்தின் வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் தனது புதிய படத்தின் படப்பிடிப்பை நடத்தி வந்தநடிகர் கமல்ஹாசன் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டார். நடிகர், நடிகைகளுடன் அவர் சென்னை திரும்பினார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இனி சென்னையிலேயே நடைபெறும் என கமல்ஹாசன் இன்று (15.09.03)வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் சண்டியர் படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே கடும் எதிர்ப்பு உருவாகியது. பெயரை மாற்ற வேண்டும்என்று கோரிக்கை எழுந்தது. மாற்றாவிட்டால் படப்பிடிப்பு நடத்த முடியாது என்று புதிய தமிழகம் கட்சியின்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மிரட்டினார். பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த கமல்ஹாசன், படத்தின்பெயரை மாற்றுவதாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பை தொடங்கினார் கமல். சமீபத்தில் தேனி மாவட்டம் வத்தலகுண்டுபகுதிக்கு வந்திறங்கிய படக்குழுவினர் படப் பிடிப்பை தீவிரமாக நடத்தி வந்தனர். இந் நிலையில் கடந்த வாரத்தில்இரு முறை படப்பிடிப்பு தடை பட்டது.

படக் குழுவினர் மீது தாக்குதல் நடக்கலாம் என்று வந்த செய்தியால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.கலைஞர்கள் அனைவரும் ஹோட்டல்களுக்குத் திரும்பினர். படப்பிடிப்பு தொடர்ந்து நடக்குமா, இல்லையாஎன்பது குழப்பமாக இருந்து வந்தது.

இந் நிலையில், படக் குழுவினர் சென்னை திரும்பத் தொடங்கிவிட்டனனர். கமல்ஹாசனும், நடிகை கெளதமிஆகியோர் ஒரு காரிலும், நடிகர் நெப்போலியன் மற்றும் நடிகை அபிராமி ஆகியோர் மற்றொரு காரிலும்கிளம்பினர். இவர்களைத் தொடர்ந்து பிற நடிகர். நடிகைகளும் கார்களில் கிளம்பினர்.

கமல்ஹாசனின் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் ஹோட்டல் பகுதியில் குழுமியிருந்ததால் அங்கு பெரும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நடிகர்கள் மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினர்.

இதற்கிடையே வத்தலகுண்டில் ஒரு காட்சியில் கமல் அரிவாளோடு பாயும் காட்சி படமாக்கப்பட்டபோது அதைக்கண்காணித்து வந்த ரகசிய போலீசார் இடையில் பாய்ந்து வந்து கமலைத் தடுத்ததோடு, படப் பிடிப்பையும்உடனடியாக ரத்து செய்யச் சொன்னதாகத் தெரிகிறது.

வத்தலகுண்டு பகுதியில் இனியும் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர். இதையடுத்துஅங்கிருந்து கமல் இடத்தைக் காலி செய்ததாகத் தெரிகிறது.

இந் நிலையில் சென்னை திரும்பிய கமல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எனது இன்னும் பெயரிடப்படாத படம் 70 சதவீதம் முடிந்துவிட்டது. சில பாடல் காட்சிகளும், ஒரு கண்மாய் காட்சி,ஜல்லிக் கட்டு காட்சி மட்டுமே பாக்கி. இவற்றை திண்டுக்கல் அருகே உள்ள கிராமங்களில் படமாக்க முடிவுசெய்திருந்தோம்.

வழக்கமாக இந்த நேரத்தில் நிரம்பி வழியும் கண்மாய்கள் வறண்டு கிடப்பதாலும், படப்பிடிப்புக்குத் தேவையானசாதனங்கள் கிடைக்காததாலும் படப்பிடிப்பை சென்னைக்கு மாற்றிவிட்டோம்.

தயவு செய்து இந்த சிறிய தயாரிப்பு நிர்வாக முடிவுக்கு அரசியல் சாயமோ அல்லது தீவிரவாத சாயமோ பூசவேண்டாம் என்று பத்திரிக்கைகளைக் கேட்டுக் கொள்கிறேன். வெளிவரும் பல செய்திகளில் உண்மையில்லை.அதை வெளியிடும் பத்திரிக்கைக்கும் எனக்கும் அவை அகெளரவத்தை ஏற்படுத்துகின்றன.

படத்தின் பெயர் மாற்றத்தை பாடல் கேசட் வெளியீட்டின்போது சொல்வதாக இருக்கிறேன். நான் எழுதியுள்ளகதையைத் தவிர பாக்கி எல்லா கதைகளும் பத்திரிக்கை நண்பர்களின் கற்பனை வளத்தில் எனது கதை என்றபெயரில் பிரசுரமாகியுள்ளன. இதில் சில கதைகள் நன்றாகக் கூட இருக்கின்றன. எனது அடுத்த படத்துக்கு அவைபிரயோஜனப்படலாம்.

இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

  • "சண்டியருக்கு" மீண்டும், மீண்டும் சிக்கல்!
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil