»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெரியாரின் பக்தன், நாத்திகக் கொள்கையில் உறுதி என இருந்து வந்த கமல்ஹாசன், சமீப காலமாக இந்தக்கொள்கையிலிருந்து விலகிச் செல்ல ஆரம்பிதிருப்பதாகச் சொல்கிறார்கள்.

சண்டியர் படுத்தும் பாடுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள். சண்டியர் பட அறிவிப்பைத் தொடர்ந்து ஏற்பட்டுவரும் சிக்கல்கள் கமலை ரொம்பவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளன. மேலும் குடும்ப வாழ்விலும் தனிப்பட்டவாழ்க்கையிலும் ஏற்பட்ட அடுத்தடுத்த சரிவுகள் அவரை தளர்வடையச் செய்துவிட்டதாம்.

இதுவரை இல்லாத அளவுக்கு இத்தனை குழப்பங்கள் ஏற்பட்டதில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தஅவருக்கு ஒரு முக்கியப் புள்ளியின் அறிவுரை கிடைத்துள்ளது. பேசாமல், காஞ்சிபுரம் சென்று சங்கராச்சாரியாரைச்சந்தித்துப் பேசுங்கள், குழப்பங்கள் தீரும் என்பதுதான் அந்த அறிவுரை.

ஆனால், நான் போய் சங்கராச்சாரியாரை எப்படிப் பார்ப்பது என்று மறுத்துள்ளார் கமல். அதற்கு அந்த முக்கியப்புள்ளி, ஒரு சாமியாராக நினைத்து பக்தியுடன் அவரைப் பார்க்க வேண்டாம். மூத்தவர் என்ற முறையில்அறிவுரைக்காக அவரிடம் செல்வதாக நினைத்துக் கொண்டு போய்ப் பாருங்கள் என்றாராம்.

முதலில் தயக்கம் காட்டினாலும், பின்னர் சரியென்று ஒப்புக் கொண்டு முதல் முறையாக காஞ்சிக்கு சென்றுள்ளார்கமல். இது நடந்தது சென்ற மாத மத்தியில். ஆனால், விஷயம் இப்போது தான் வெளியில் கசிய ஆரம்பித்துள்ளது.

மடத்துக்கு வந்த கமலைக் கண்டு ஆச்சரியமடைந்த ஊழியர்கள், அவரை வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றுள்ளனர். அதேபோல சங்கராச்சாரியார்களுக்கும் கூட கமலின் வருகை ஆச்சரியம்தானாம்.

என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்றே தெரியாமல் உள்ளே சென்ற கமல் சுமார் அரை மணி நேரம்ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்தரரிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்பினாராம்.

அதன் பிறகு கமல், மேலும் 3 முறை காஞ்சி மடத்திற்குச் சென்று வந்து விட்டதாகத் தெரிகிறது.

அவருக்குள் ஏற்பட்டுள்ளது பக்தியா அல்லது குழப்பத்திற்கான தீர்வுக்காக காஞ்சி மடம் போகிறாரா என்றுதெரியவில்லை. இந்தச் சந்திப்பால் சண்டியர் படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை விலகி விட்டதாகவும் தெரியவில்லை.

இருப்பினும் இப்போது அடிக்கடி கமல் செல்லும் இடமாக காஞ்சி மடம் மாறி வருகிறது என்பது மட்டும்உறுதியாகத் தெரிகிறது.

  • கமல் படப்பிடிப்பு ரத்து பின்னணி
  • "சண்டியருக்கு" மீண்டும், மீண்டும் சிக்கல்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil