»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மீண்டும் ஒரு வித்தியாசமான கதைக் களத்தின் பின்னணியில், வேறுபட்ட மேக்கப்பில், புரட்சிகரமான ஒரு வேடத்தில் தோன்றவுள்ளார் கலைஞானிகமல்ஹாசன்.

குஷ்புவின் மணாளன் சுந்தர்.சி. இயக்கும் அன்பே சிவம் படத்தில்தான் கமல்ஹாசன் இந்த வித்தியாச வேடம்ஏற்கிறார். சமூகத்தின் ஒரு அங்கமாக இருக்கும் ஒரு கலைஞன், அந்த சமூகத்தில் நடைபெறும் அக்கிரமங்கள்,அநியாயங்கள், அலங்கோலங்களைப் பார்த்து கொதித்து எழுகிறான்.

எதையுமே கலை நயத்தோடு பார்த்துப் பழக்கப்பட்ட அவனது கண்களும், கைகளும் கொலை பாதக வெறியோடுஆவேசத்துடன் ஓங்குகின்றன.

இந்த ஆவேச கலைஞனின் கோபத்திற்கு துணையாக வருகிறான் இன்னொரு கலைஞன். இரு கலைஞர்களும்சேர்ந்து சமூக அவலங்களை வேரறுக்க முயல்கிறர்களாம்.. இப்படிப் போகிறது அன்பே சிவத்தின் கதை.

கதையை கமல்ஹாசனே எழுதியுள்ளார். திரைக் கதையும் அவரே. கமலின் கோபாவேச வேள்வியில் துணை நிற்கும்இன்னொரு கலைஞராக வருபவர் மாதவன். மாதவனையும் தனது லெவலுக்கு கோபமான இளைஞனாக மாற்றிஇருக்கிறாராம் கமல்.

இதில் கிரணும் நடிக்கிறார். ஆனால், அவர் மாதவனுக்கு ஜோடியாம், கமலுக்கு இல்லையாம். கமலுக்கு ஜோடியே இல்லைஎன்கிறார்கள். பாடல்கள், டான்ஸ் கூட மாதவனுக்குத் தானாம். கமல் சீரியஸ் ரோல் மட்டும் செய்கிறாராம்.

கமலின் பேவரிட்டான நாசரும் இருக்கிறார். முதலில் மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்குவதாக இருந்தது. ஆனால்,கமலுக்கும் பிரியதர்ஷனுக்கும் கதையில் பிரச்சனை வர அவர் விலகிக் கொண்டுவிட்டாராம்.

இசையை வித்யாசாகர் கவனிக்கிறார். கமலுடன் இதுதான் இவருக்கும் முதல் படம். பிருந்தா நடனத்தைஅமைக்கிறார். கமலின் மேக்கப் ஆலோசகரான மைக்கேல் வெஸ்ட்மோர் இந்தப் படத்தில் கமலுக்கு வித்தியாசமானகெட்டப்பை உருவாக்கித் தந்துள்ளார்.

சில காலமாக காமெடிப் படங்களாக செய்து வந்த கமல் அன்பே சிவத்தில் சீரியஸ் ரோல் செய்யவுள்ளார்.

நல்ல கமல் படம் பார்த்து ரொம்ப நாளாச்சு என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களின் ஏக்கத்தை தீர்க்க வருகிறான்இந்த அன்பே சிவம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil