»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வீரர்கள் மற்றும் முரட்டுக் காளைகளுடன் கமல்ஹாசனின் படப் பிடிப்புக் குழுவினர்ஆந்திராவுக்கு புறப்பட்டனர்.

நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காட்சி வருகிறது. இந்தக் காட்சியைதிண்டுக்கல் அல்லது அலங்காநல்லூரில் படமாக்கத் தான் நகல் முதலில் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், போலீசார்படப்பிடிப்புக்கு தடை விதித்ததால் சென்னை திரும்பிய அவர் இப்போது தனது சூட்டிங்கை ஆந்திராவுக்குமாற்றிவிட்டார்.

இந்தக் காட்சியை எடுப்பதற்காக காளைகள் மற்றும் மாடு பிடிக்கும் அலங்காநல்லூரைச் சுற்றிய கிராமஇளைஞர்களை ஆந்திராவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அலங்காநல்லூர், பாலமேடு, பொதும்பு போன்ற பகுதிகளில் இருந்து ஜல்லிக்கட்டு மாடுகளும் ஸ்ரீதர், அலும்பு,பாண்டி, முனியன் போன்ற மாடுபிடி வீரர்களும் அலங்காநல்லூர் அருகே உள்ள சர்க்கரை ஆலையின் தலைவர்மோகன் தலைமையில் ஆந்திரா சென்றுள்ளனர்.

இவர்கள் அலங்காநல்லூர் முனியாண்டி கோவிலில் சிறப்பு பூஜைநடத்திவிட்டுக் கிளம்பினர்.

ஜல்லிக்கட்டு காளைகளும் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன. கமல் உள்ளிட்ட படக் குழுவினர் ஏற்கனவேஆந்திரா சென்றுவிட்டனர்.

  • கமல் படப்பிடிப்பு ரத்து பின்னணி
  • "சண்டியருக்கு" மீண்டும், மீண்டும் சிக்கல்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil