»   »  சினேகாவுக்கு கமலின் "இச் இச்" !

சினேகாவுக்கு கமலின் "இச் இச்" !

Posted By:
Subscribe to Oneindia Tamil
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் கமல்ஹாசனின் டிரேட் மார்க் முத்தக் காட்சிகள் நிறையவே உள்ளதாம்.

கமல்ஹாசன், பிரபு இணைந்து கலாய்க்கவுள்ள படம் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். இந்தப் படத்தில் ஒரு சின்ன,ஆனால் நல்ல வேடம் இருந்தது. இதில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பிய கமல் தனுஷிடம்-நரடியாகக் கேட்-டார்.

இதைக் கேட்டதும் சந்தோஷ அதிர்ச்சிக்குள்ளான தனுஷ், உடனடியாக ஒத்துக் கொண்டார். ஆனால் கால்ஷீட்புத்தகத்தைப் பார்த்தபோது, படு டைட்டாக இருந்தது தெரிய வந்தது. இதனால் மிகுந்த தயக்கத்துடன் கமலிடம்ஸாரி சொன்னார்.

பரவாயில்லை என்று தட்டிக் கொடுத்த கமல் வேறு நடிகரைப் போடலாம் என்று இயக்குநர் சரணிடம் கூறியுள்ளார்.யாரைப் போடலாம் என்று தீவிரமாக யோசித்து வந்த நேரத்தில், மலையாள நடிகர் ஜெயசூர்யாவை புக் செய்யமுடிவு செய்யப்பட்டது.

ஜெயசூர்யாவிடம் தொடர்பு கொண்டு கால்ஷீட் கேட்டபோது உடனடியாக கொடுத்து விட்டாராம். ஜெயசூர்யா யார் என்று தெயாதவர்கள் கவனத்திற்கு: என் மன வானில் படத்தில் ஊமை ஹீரோவாகநடித்திருப்பாரே அவர்தான் ஜெயசூர்யா.

மெயின் மேட்டருக்கு வருவோம். கமல் படம் என்றால் இதழோடு இதழ் சேரும் இதமான முத்தக் காட்சிகளுக்குபஞ்சமே இருக்காது. ஆனால் வசூல்ராஜா படத்தில் தனக்கு கமலோடு முத்தக் காட்சிகள் எதுவும் இல்லை என்றுசினேகா கூறி வந்தார்.

ஆனால் உண்மையில் படத்தில் பல முத்தக் காட்சிகள் உள்ளனவாம். அதுவும் சினேகாவுக்கு கமல் சுடச் சுட பலமுத்தங்கள் கொடுத்துள்ளாராம். இப்போதே வெளியிட்டால் பரபரப்பாகி விடும் என்பதால் கடைசி நேரத்தில்முத்தக் காட்சிகள் உள்ள ஸ்டில்களை ரிலீஸ் செய்ய உள்ளார்களாம்.

அதுதானே, முத்தத்தை வசூலிக்காமல் விட்டு விடுவாரா இந்த முத்த ராஜா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil