»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமலஹாசனின் புதிய படத்தில் நடிக்கும் படப்பிடிப்பு குழுவினர் 600 பேருக்கும் அடையாள அட்டைகள்வழங்கப்பட்டுள்ளன. நடிகர்-நடிகைகளுக்கு கார் பாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவை இருந்தால் தான் சூட்டிங்ஸ்பாட்டுக்குள்ளேயே அனுமதிக்கிறார்கள்.

கமலஹாசன் தனது புதிய படத்துக்கு சண்டியர் என்று பெயர் சூட்டியதற்கு, ஒரு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புஎழுந்தது. இதனால் படப் பிடிப்பே ரத்தானது.பெயரை மாற்றி, முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து இப்போது தான்மீண்டும் சூட்டிங் ஆரம்பித்துள்ளது.

தேனியில் எடுக்க இருந்த படப்பிடிப்பை சென்னை கிண்டியில் உள்ள மிகப் பெரிய கோகோகோலா மைதானத்தில்செட் போட்டு எடுத்து வருகிறார் கமல்.

கடந்த வாரம் படப் பிடிப்பு தொடங்கியது. இதிலும் புதிய தமிழகம் அல்லதுவேறு அமைப்புகளைச் சேர்ந்த ஆட்கள் புகுந்து ஏதாவது கலாட்டா செய்துவிடலாம் என்று அஞ்சிய கமல், படப்பிடிப்புக் குழுவில் உள்ள அனைவருக்கும் அடையாள அட்டைகள் தர உத்தரவிட்டார்.

கமலில் ஆரம்பித்து லைட் பாய், டீ பாய், டிரைவர்கள், துணை நடிகர்கள், தச்சர்கள், சமையல் ஆட்கள் என சுமார்600க்கும் மேற்பட்டவர்களுக்கு போட்டோக்களுடன் கூடிய அடையாள அட்டைகள் தரப்பட்டுள்ளன.

மேலும் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த 50 பேர் , கமலஹாசன் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த 100பேர் அடங்கிய பாதுகாப்புப் படையும் இந்த சூட்டிங் ஸ்பாட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.

சூட்டிங் முடிந்த பின்னர் இரவிலும் செட்டுக்கு பலத்த பாதுகாப்பு தொடர்கிறது. கமலஹாசனின் தனிப்பட்டஅனுமதியின்றி வெளியார் யாரும் அந்த செட்டுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

நாசர், அபிராமி, நெப்போலியன் உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் மற்றும் படப்பிடிப்பு குழுவினரின் கார், இரண்டுசக்கர வாகனங்களுக்கு தனி பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதைக் காட்டினால் தான் உள்ளேயே வாகனம்அனுமதிக்கப்படுகிறது.

இதே கோகோ கோலா மைதானத்தில் நடந்த ரஜினியின் பாபா படப்பிடிப்புக்கும் கிட்டத்தட்ட இதே போன்றகடுமையான பாதுகாப்பு தான் போடப்பட்டது.

இங்கே செட் போட்டு எடுக்கப்பட்ட பாபா தோல்வியடைந்ததால் கோகோகோலா மைதானம் வேண்டாமே எனசிலர் கமலிடம் சென்டிமெண்ட் காரணங்களைச் சொல்லி குழப்ப, செண்டிமென்ட் எல்லாம் எனக்கு இல்லைஎன்று சொல்லி அதை ஒதுக்கித் தள்ளிவிட்டாராம் கமல்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil