»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

கமல்ஹாசனின் புதிய படத்தில் நாசர் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.


சண்டியர் என்று பெயரிடப்பட்டு, அது சர்ச்சையாகி படத்தின் பெயர் மாற்றப்பட்டு, சென்னை கேம்ப கோலாமைதானத்தில் மிகவும் ரகசியமாக நடந்த வரும் கமல் படத்தில் நாசருக்கு முக்கியமான கதாபாத்திரம்கொடுக்கப்பட்டிருந்தது.

இந்தப் படத்தில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நாசர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சில ஸ்டில்களும் கூட கமல்தரப்பில் இருந்து தரப்பட்டன.

ஆனால் இப்போது அந்த கேரக்டல் நாசர் நடிக்கவில்லை என்று கூறுகிறார்கள். சண்டியர் (இப்போதுவிருமாண்டி?) படத்திற்காக கொடுத்திருந்த கால்ஷீட், சர்ச்சையில் வீணாகி விட்டதால், மீண்டும் கால்ஷீட்கொடுக்க இயலவில்லை என்பதால் நாசர் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இருப்பினும் இதுகுறித்து கமல் தரப்பில் நாம் நூல் விட்டுப் பார்த்தபோது, உறுதிப் படுத்த முடியவில்லை.

ஆனால் நாசர் இல்லை என்று சூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்று வரும் கோலிவுட் குருவிகள் உறுதியாகச்சொல்கின்றன.

அதே நேரத்தில் படத்தில் கெளதமியின் வேடம் பெரிதுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். முதலில் குட்டிரோலாக இருந்தது. இப்போது கொஞ்சம் பில்ட் அப் தரப்பட்டுள்ளது.

தனக்கு தினமும் படத்தில் ஷாட் இருக்கிறதோ இல்லையோ, சூட்டிங் ஸ்பாட்டில் கமலுடன் தவறாமல்ஆஜராகிவிடுகிறாரம் கெளதமி.

படத்தின் காஸ்ட்யூம் டிசைனிங் அதாவது ஆடை வடிவமைப்பிலும் கெளதமி ஆலோசனை சொல்கிறாராம். (முன்புஅந்த வேலையை வாணி கணபதி, சரிகா ஆகியோர் செய்தனர்).

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil