»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி:

படப் பிடிப்புக்கு போலீஸ் பாதுகாப்புத் தர முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாகஅறிவித்துவிட்டதையடுத்து சண்டியர் படப் பிடிப்புக் குழு ஒட்டுமொத்தமாக தேனியில் இருந்து சென்னைதிரும்பிவிட்டது.

கடந்த இரு வாரமாக அங்கு முகாமிட்டிருந்த படப் பிடிப்புக் குழுவால் கமலுக்கு ரூ. 30 லட்சம் நஷ்டம்ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஜெயலலிதாவைச் சந்திக்க கமல் நேரம் கேட்டும் கூட அதுவும் ஒதுக்கப்படவில்லை. இதனால் தேனியில் படப்பிடிப்பு நடத்துவது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து கொண்ட கமல், தனது குழுவினரை திரும்ப வருமாறுகூறிவிட்டார்.

இதையடுத்து கொஞ்சம் நம்பிக்கையுடன் தேனியிலேயே தங்கியிருந்த நாசர், அபிராமி, நெப்போலியன், சங்கிலிமுருகன் மற்றும் துணை நடிகர்கள் அனைவரும் சென்னை திரும்பிவிட்டனர்.

கடந்த ஒரு மாதமாக தேனியில் போடப்பட்டு வந்த ஜமீன் பங்களா, கோர்ட், கோழிப் பண்ணை, வீடுகளின்செட்களும் கலைக்கப்பட்டுவிட்டன.

அவை அப்படியே பார்ட் பார்ட்டாகக் கழற்றப்பட்டு லாரிகளில் கொண்டுவரப்பட்டுவிட்டன. இந்த செட்கள் பல லட்சம் செலவில் போடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் சென்னையிலேயே செட் போட்டு படத்தை எடுக்க கமல் முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது. அல்லதுஆந்திராவில் படப் பிடிப்பை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது. முன்பெல்லாம் கிராமப் படங்களை மைசூர்அருகே படம் பிடித்து வந்தனர் தமிழ்த் திரையுலகினர்.

ஆனால், காவிரி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவிட்ட நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகினர்யாரும் கர்நாடகத்துக்குள் படம் எடுக்க கால் வைப்பதே இல்லை.

இந் நிலையில் சண்டியர் படத்துக்குப் பாதுகாப்புத் தரத் தயாராக இருப்பதாக பல்வேறு ரஜினி மன்றங்களும்அறிவித்துள்ளன.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil