»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

தேனி:

சண்டியர் படப்பிடிப்பை சென்னை மற்றும் ஆந்திர மாநிலம் ஹைதராபாத், ராஜமுந்திரியில் நடத்த கமல்ஹாசன்முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் எதிர்ப்பு காரணமாக தனது படப்பிடிப்பை தள்ளிவைத்துள்ள கமல்ஹாசன், தற்போது சண்டியர் படப்பிடிப்பை எங்கு நடத்துவது என்பது தொடர்பாக தீவிரஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னையில் உள்ள பிரம்மாண்டமான கேம்பகோலா மைதானத்தில் செட் போட்டு காட்சிகளை எடுக்கவும்இங்குதான் பாபா படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டன), மற்ற காட்சிகளை ஆந்திர மாநிலம்நெல்லூர், ராஜமுந்திரி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் படம் பிடிப்பது என்றும் திட்டமிட்டுள்ளாராம்.

கர்நாடகத்தில் உள்ள சில கிராமங்கள் தமிழகத்தின் பின் தங்கிய கிராமங்களை ஒத்திருக்கும். குறிப்பாக மைசூருக்குஅருகே உள்ள சில கிராமங்கள். இங்கு தான் 16 வயதினிலே படம் முழுவதுமே தயாரானது. ஆனால், இப்போதுஅங்கு ஷூட்டிங் நடத்தும் சூழ்நிலை இல்லை.

இதனால் ஆந்திரா இறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், முன்பு திட்டமிட்டிருந்ததுபோல சண்டியரைதீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடியாமல் போகலாம் என்கிறார்கள். ஏற்கனவே, தேனியில் ஏற்பட்ட பிரச்சனையால்இரு வாரங்கள் வீணாகிவிட்டன.

இனி செட் போடவே சில வாரங்கள் ஆகும். எனவே படத்தை பொங்கல் ரிலீசாக மாற்ற கமல் முடிவெடுத்துவிட்டார்என்கிறார்கள்.

என்ன ஆனாலும் சரி, நிச்சயம் சண்டியர் படத்தை எடுத்தே தீருவேன் என்ற பிடிவாத மூடில் இருக்கிறாராம் கமல்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil