இறுதிக்கட்டத்தை நெருங்கும் விக்ரம் ஷுட்டிங்...ஹாட் அப்டேட் வெளியிட்ட படக்குழு
சென்னை : இந்திய அளவில் உருவாகி வரும் மிகப் பெரிய மல்டி ஸ்டார்கள் படங்களில் ஒன்று லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் விக்ரம். அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் இந்த படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.
கமலின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் வயதான போலீஸ் அதிகாரி ரோலில் தான் கமல் நடிக்கிறார். விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி, நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அனுமதி மறுத்த போலீஸ்
ஏற்கனவே விக்ரம் படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் காரைக்குடியிலும், இரண்டாம் கட்ட ஷுட்டிங் புதுச்சேரியிலும் நடத்தப்பட்டது. மூன்றாம் கட்ட ஷுட்டிங்கை சென்னையில் உள்ள தமிழ்நாடு போலீஸ் மியூசியத்தில் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் சென்னை போலீஸ் அனுமதி அளிக்க மறுத்து விட்டது.

அடுத்து கோவையில்
இதனால் சென்னையின் மற்றொரு லொகேஷனில் செட் அமைத்து, மூன்றாம் கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். அடுத்த கட்ட நான்காம் கட்ட படப்பிடிப்பு கோவையில் நடத்தப்பட உள்ளதாம். நவம்பர் 17 ம் தேதி துவங்கி, தொடர்ந்து ஒரு மாதம் ஷுட்டிங் நடத்தப்பட உள்ளதாம்.

இதுதான் ஹைலைட்
கோவையில் நடத்தப்பட உள்ள ஷுட்டிங்கின் ஹைலைட் என்னவென்றால், இவற்றில் பெரும்பாலான காட்சிகளில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் மூன்று பேரும் இணைந்து நடிக்க போகிறார்களாம். இதனால் இந்த மெகா ஸ்டார்கள் ஒரே காட்சியில் இணைந்து நடிப்பதை பார்க்க ஒட்டுமொத்த படக்குழுவும் காத்துக் கொண்டிருக்கின்றதாம்.

க்ளைமாக்சை நெருங்கும் விக்ரம்
கோவையில் நடத்தப்படும் நான்காம் கட்ட ஷுட்டிங்குடன் விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த ஷுட்டிங்கும் நிறைவு செய்யப்படும் என கூறப்படுகிறது. அதற்கு பிறகு போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கப்பட்டு, 2022 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விக்ரம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனராம்.


Click it and Unblock the Notifications











