கமலின் விக்ரம் செம ஹாட் அப்டேட்... ஷுட்டிங் எங்கே, எப்போது ஆரம்பமாகுது தெரியுமா ?
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது. விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்த இந்த படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இதில் விஜய், விஜய் சேதுபதி இருவரின் ரோலுக்கும் சமஅளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
கொரோனா காலத்திலேயே தியேட்டரில் 50 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட சமயத்திலேயே மாஸ்டர் படம் ரிலீஸ் செய்யப்பட்டு, ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட 14 நாட்களிலேயே ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டு, அதிலும் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தது.

கமலை இயக்கும் லோகேஷ் கனகராஜ்
இதைத் தொடர்ந்து கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ், கமலை வைத்தே படம் இயக்க உள்ளார். விக்ரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் கமல் ஹீரோவாக நடிக்க, விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் வில்லன்களாக நடிக்கிறார்கள்.

இது தான் விக்ரம் பட கதையா
கேங்ஸ்டர்களை எதிர்க்கும் ஆக்ஷன் ஹீரோ கதை தான் விக்ரம் படத்தின் கதை என சொல்லப்படுகிறது. கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம் இது. இந்த படத்தின் வேலைகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பூஜையுடன் முறைப்படி துவங்கப்பட்டது. இது தொடர்பான ஃபோட்டோக்கள், வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வலம் வந்தது.

கமல் மகனாக காளிதாஸ் ஜெயராம்
லேட்டஸ்ட் தகவலாக இந்த படத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கமலின் மகனாக காளிதாஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் ஷுட்டிங் துவங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கே ஷுட்டிங் தெரியுமா
தற்போதைய தகவலின்படி ஆகஸ்ட் 20 ம் தேதி காரைக்குடியில் விக்ரம் படத்தின் ஷுட்டிங் துவங்க உள்ளது. முதல்கட்ட ஷுட்டிங்கில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் மூவருமே பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இவர்களுடன் நரேன், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் வில்லன்களாக நடிக்க உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது.

ஏதாவது காரணம் இருக்கா
விக்ரம் படத்தின் கதை 5 வில்லன்களை கொண்ட கேங்ஸ்டர் கதை என்கிறார்கள். ஆனால் படத்தின் ஷுட்டிங்கை காரைக்குடியில் துவங்குகிறார்கள். இதற்கு ஸ்பெஷல் காரணம் அல்லது சென்டிமென்ட் ஏதாவது இருக்கலாம் என கூறப்படுகிறது. அல்லது ஃபிளாஷ்பேக் காட்சிகள் ஏதாவது இங்கு எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

வரவேற்பை பெற்ற ஃபஸ்ட்லுக்
இந்த படத்தில் கமல் பார்வையற்றவராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபஸ்ட்லுக் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது. கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் மூவரின் முகங்கள் இருப்பது போல் இந்த போஸ்டர் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஃபஸ்ட்லுக் போஸ்டர், கமலின் முந்தைய ஹிட் படமான விருமாண்டி படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை போலவே உள்ளதாக பலரும் விமர்சித்தனர்.

நடிகர்கள் ரொம்ப பிஸி
இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் கமல், பாபநாசம் 2, இந்தியன் 2 உள்ளிட்ட சில படங்களில் கமிட்டாகி உள்ளார். அதே சமயம் முக்கிய வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது இந்தியில் மெகா ப்ராஜக்ட் வெப்சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்த விக்ரம் படத்தின் ஷுட்டிங்கை விரைவாக முடிக்க டைரக்டர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











