»   »  மும்பை எக்ஸ்பிரஸ் மனீஷா!

மும்பை எக்ஸ்பிரஸ் மனீஷா!

Subscribe to Oneindia Tamil

கமல்ஹாசன் தமிழ் மற்றும் இந்தியில் தயாரிக்கும் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் மனீஷா கொய்ராலா நடித்துக்கொண்டிருக்கிறார்.

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில், ராஜ்கமல் பட நிறுவனம் சார்பில் கமல் தயாரிக்கும் படம் மும்பை எக்ஸ்பிரஸ். இதில் முதலில்மாதுரி தீக்ஷித் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் கர்ப்பம் காரணமாக அவர் மறுத்து விட்டார். பின்னர் தபுவை புக் செய்தார்கமல். ஆனால் முதலில் சரி சொன்ன தபு, பின்பு ஒதுங்கி விட்டார். (என்ன பயமோ!).

இதையடுத்து கஜோலிடம் பேசினார் கமல். கஜோல் நடிக்க ஒப்புக் கொண்டிருந்த நிலையில், மனிஷா கொய்ராலாவை வைத்துசூட்டிங்கை சத்தமில்லாமல் ஆரம்பித்துவிட்டார் கமல். மும்பையில் நேற்று முதல் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.

கமலுடன் நடிக்க கஜோலுக்கு அவரது கணவர் அஜய்தேவ்கன் அனுமதி தந்துவிட்ட நிலையிலும், திருமணமான நடிகையைஜோடியாக்க வேண்டாமே என்று இயக்குனர் தரப்பில் கூறப்பட்டதால், கடைசி நேரத்தில் மனிஷாவுக்கு மாறிவிட்டாராம் கமல்.அதே நேரத்தில் இந்தப் படத்தின் இந்திப் பதிப்பில் மகேஷ் மஞ்ரேகருக்கு ஜோடியாக கஜோல் தான் நடிக்கிறார்.

தமிழில் கமலுக்கு ஜோடி போட்டதில் ரொம்பவே மகிழ்ச்சியாய் இருக்கிறாராம் மனீஷா கொய்ராலா. முதலில் அர்ஜுனுடன்முதல்வன், பின்னர் கமலுடன் ஆளவந்தான், அடுத்ததாக ரஜினியுடன் பாபா என்று தமிழின் முன்னணி மூத்த நடிகர்களுடன் நடித்தமனிஷாவை இளையவர்கள் யாரும் ஜோடி சேர்க்கவில்லை.

இதனால் தமிழில் தொடர்ந்து வாய்ப்புக்கள் இல்லை. இந்தியில் கடும் போட்டிக்கு நடுவே ஆடைத் தளர்ப்பு மூலம் தன் இடத்தைதொடர்ந்து தக்க வைக்க முயன்று கொண்டிருக்கிறார் மனிஷா. இந் நிலையில் மனிஷாவை கமல் மீண்டும் அழைத்துவந்திருக்கிறார்.

குடியும் கும்மாளமுமாக இருக்கும் மிக ஜாலியான நடிகை இவர்.

வழக்கம்போல் வித்தியாசமான கெட்டப்பில் கமல் நடிக்கிறார். சூட்டிங்கும் சத்தமில்லாமல் தொடங்கிவிட்டது. பூஜை,புனஸ்காரங்களில் நம்பிக்கை இல்லாதவர் என்பதால், படத்தை கமல் தொடங்கியது கூட வெளியில் தெரியவில்லை.

ஆளவந்தானில் கமலால் அறிமுகப்படுத்தப்பட்ட பசுபதி, நாசர், ரமேஷ் அரவிந்த், வையாபுரி, கோவை சரளா என பலரும்நடிக்கின்றனர். குண்டுப் பையன் ஒருவனும் நடிக்கிறான்.

பரத்ஷாவின் நிதியுதவியுடன் இந்தப் படத்தை இரு மொழிகளில் தயாரிக்கும் கமல், கூடவே ஆங்கிலம் அல்லது கன்னடத்திலும்சேர்த்து இப் படத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், தேவையில்லாத ரிஸ்க் ஏன் என்று ரொம்பவும் வேண்டியவர்கள்அறிவுரை சொன்னதால், அந்தத் திட்டத்தை மூட்டை கட்டி பரணில் போட்டுவிட்டாராம் கமல். (ரொம்ப நல்லது!)

இந்தப் படத்தில் கமலின் பெயர் அவினாசி. நாசர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், அவரது கேரக்டரின் பெயர் ஸ்ரீ பூர்ணபிரஞை ராவ், ரமேஷ் அரவிந்த் தம்பு செட்டி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கோவை சரளாவுக்கு கமலின் தங்கை ரோல். இதில் வையாபுரிக்குப் பெயர் ஜான்சி (!)

படத்துக்கு இசை இசைஞானி இளையராஜா தான். கேமராவை கவனிப்பது சித்தார்த். தயாரிப்பு நிர்வாகத்தை வழக்கம்போல்அண்ணன் சாருஹாசனிடம் ஒப்படைத்துவிட்ட கமல், கதை-திரைக்கதை-வசன வேலைகளைப் பார்க்கிறார்.

இது சமூக அவலங்களை காமெடியாக சொல்லும் ஒரு முயற்சி என்கிறார் கமல். மும்பையில் இருந்து சென்னை வரும் ரயிலில்நகரும் கதையாம். படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலாம் என்கிறது ராஜ்கமல் வட்டாராம்.

படப்பிடிப்பே இப்போது தான் துவங்கியிருக்கும் நிலையில் அதற்குள் டிரெயிலரையும் வெளியிட்டு அசத்திவிட்டார் கமல். இதைஎப்போது எடுத்தார் என்று குழம்பி நிற்கிறது கோடம்பாக்கம். அத்தனை ரகசியம்.. அத்தனை ஸ்பீட்...

இந்தப் படத்தை முடித்துவிட்டு ரோஜா கம்பைன்ஸ்சுக்காக ஒரு படத்தில் நடிக்கும் கமல், அடுத்து தான் வாங்கி வைத்திருக்கும்ஸ்பானிஷ் படத்தின் ரீ-மேக் உரிமையை வைத்து அதை அப்படியே தமிழில் தயாரிக்க உள்ளாராம்.

Tempus Fugit என்பது அந்த ஒரிஜினல் ஸ்பானிஷ் படத்தின் பெயர். இதன் தமிழாக்கத்தை கமலே இயக்குவார் என்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil