»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

"நள தமயந்தி" படத்தில் மாதவனுக்காக ஒரு பாடலுக்கு குரல் கொடுத்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வரும் "நள தமயந்தி" முழுநீள நகைச்சுவைப் படமாகத்தயாராகி வருகிறது.

இதில் ஹீரோவாக மாதவனும் அவருக்கு ஜோடியாக கீது மோகன்தாஸும் நடிக்கிறார்கள்.

இவர்களைத் தவிர டெல்லி கணேஷ், ஸ்ரீமன், மதன் பாப், வையாபுரி, ஸ்ருதிகா,

அனுஹாசன் ஆகியோரும் "நள தமயந்தி"யில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் பிரதீப் கோவிந்த் எழுதிய ஒரு ஆங்கிலப் பாடலை கமல் பாடியுள்ளார். படத்தில்மாதவன் வாயசைக்க, இந்தப் பாடலைப் பாடியுள்ளார் கமல்.

ரமேஷ் விநாயகம் இசை அமைக்கும் "நள தமயந்தி" படத்தில் வாலியும் பாடல்களை எழுதியுள்ளார்.படத்தை இயக்கிக் கொண்டிருப்பவர் மெளலி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil