»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

கமல்ஹாசனின் அடுத்த படமான சண்டியர் துவக்க விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது.ஆயிரக்கணக்கான ரகிசர்களும் பொது மக்களும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

(படம்- நன்றி தினகரன்)
சென்னைக்கு வெளியே முதல்முறையாக தமிழ் சினிமா படம் ஒன்றின் தொடக்க விழா நடப்பது இதுவே முதல்முறையாகும்.

மதுரை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த இந்த துவக்க விழாவில் கூட்டம் அதிகமாக இருந்ததால்அவ்வப்போது அடிதடியும் நடந்தது. ஒரு கட்டத்தில் மோதல் தீவிரமடையவே போலீசார் தடியடி நடத்தும் நிலைஏற்பட்டது. இதில் 3 ரசிர்களின் மண்டை உடைந்தது.

சென்னையில் இருந்து விமானத்தில் வேட்டி- சட்டையில் வந்திறங்கிய கமலஹாசனுடன் இயக்குனர்கள்பாரஜிராஜா, ரவிக்குமார், நடிகர்கள் நெப்போலியன், நாசர், வினியோகஸதர் சங்கத் தலைவர் முருகேசன்ஆகியோர் வந்திருந்தனர்.

அவர்களை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர். அங்கிருந்து 50க்கும் மேற்பட்டகார்கள் அணிவகுக்க மருத்துவக் கல்லூரி வளாகத்துக்கு வந்தனர். அங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த 3மேடைகளில் இரண்டில் கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன.

மூன்றாவது மேடையில் இரவு 7.15 மணிக்கு கமல் உள்ளிட்டவர்கள் ஏற ரசிகர்கள் ஆராவாரக் கூச்சல் போட்டனர்.சண்டியர் பட கெட் அப்பில் வந்திருந்தார் கமல்.

துவக்க விழாவில் பேசிய இயக்குனர் பாரதிராஜா,

மதுரையை அடுத்த பரமகுடி சண்டியர் நீ. நீ வெறும் கலைஞன் மட்டுமல்ல தன்னிம்பிக்கைகாரன். துணிசலானவன்,பொய் இல்லாதவன், ஒளிவு மறைவு தெரியாதவன். உனக்கு நான் கற்றுக் கொடுத்தது கொஞ்சம் தான். உன்னிடம்கற்றது தான் அதிகம்.

என்னிடம் பலரும் மதுரையில் ஏன் பூஜை போடுவதில்லை என்று கேட்டது உண்டு. விரைவில் என் அடுத்தபடத்துக்கு மதுரையில் பூஜை போட்டு கமலுக்கு பெருமை சேர்ப்பேன் என்றார்.

கமல் பேசுகையில் தமிழ்த் திரையுலகம் நலிவடைந்துள்ளது. அதை மீண்டும் உற்சாகப்படுத்த இது போன்ற திரைவிழாக்கள் அவசியம். இதயம் பலவீனமாகியுள்ளது, அவ்வளவுதான். உடைந்து போய்விடவில்லை.

திரைப்பட ஆர்வலர்களின் பாராட்டுக்கள், கைத்தட்டல்கள், திரையுலகினரைப் போய் சரியாக சேரவில்லை.இதுதான் அவர்களுக்கு ஊட்டசத்து (கமல் இப்படிச் சொன்னதும் ரசிகர்களின் கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது).திரைப்படங்கள் ரிலீஸ் ஆன பின்னர் அதில் ஏற்பட்டுள்ள தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்.அப்போதுதான் அடுத்த படத்தையாவது சரியாகத் தர முடியும். எனக்கும், எனது ரசிகர்களுக்கும் தவறுகளைச்செய்யும் தைரியமும் அதை சரி செய்யும் தைரியமும் உண்டு.

சண்டியர் நிநச்சயம் வெற்றிப் படமாக இருக்கும். வணிகரீதியிலான படம் இது என்றார் கமல்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய கமல்,

இந்த துவக்க விழாவையே பரமகுடியில் தான் நடத்த வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அது மிகச் சிறியஊர். இவ்வளவு பேரை கூட்டி வந்து தொந்தரவு குடுத்துட்டியே என்று கேட்பார்கள். இதனால் மதுரையையே என்ஊராக பாவித்து வந்துள்ளேன். இந்தப் படத்தின் கதை நிகழும் இடமும் மதுரைப் பக்கம் தான்.

சண்டியர் என்று பெயர் வைத்திருப்பதால் இது வன்முறைப் படமல்ல. வன்முறை வேண்டாம் என்று சொல்லும் படம்.வன்முறையை வைத்து நான் என்றும் படம் பண்ணி காசு பார்த்தது இல்லை. இனியும் அதைச் செய்ய மாட்டேன்.

இந்தப் படத்தில் கதாநாயகன் அரிவாளுடன் வருகிறானே என்று கேட்டார்கள். சில படங்களில் கதாநாயகன்முட்டாளாக, திக்கு வாயனாக, சப்பாயாணியாக, கொலைகாரனாக வருகிறான். அது போலத் தான் இதுவும் ஒருகேரக்டர்.

இது தேவர் மகன் இரண்டாம் பாகமா என்றும் சிலர் கேட்கிறார்கள். அதைக் கேட்கவே கோபம் வருகிறது. அதுவேறு படம். இது வேறு படம்.

நிருபர்: சாதி இல்லை என்று சொல்லும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட சாதியை முன்னிலைப்படுத்தி படம் எடுப்பது தவறுஇல்லையா?

கமல்: ஒரு சமூகம் சார்ந்த கதை சொல்லும்போது அதில் நம்பகத்தன்மை ஏற்படுகிறது. எவ்வளவு பெரிய ஊராகஇருந்தாலும் அதில் முக்கிய நபரைப் பற்றித் தான் கதை எழுத முடியும். சாதியை சாட வேண்டுமானால் அதை சாதிமூலமாகத் தான் செய்ய முடியும் என்றார் கமல்.

ரஜினி வாழ்த்து:

சண்டியர் படத் துவக்க விழாவையொட்டி கமல்ஹாசனுக்கு நடிகர் ரஜினி வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்.இயக்குனர் ரவிக்குமார் மூலமாக வாழ்த்துச் செய்தியையும் பொன்னாடையயும் ரஜினி அனுப்பி வைத்திருந்தார்.

படப் பிடிப்புக்காக கமல் உள்ளிட்ட நடிகர்களும் தொழில்நுட்பக் குழுவினரும் நேற்றிரவே தேனி போய்சேர்ந்துவிட்டனர். இன்றே படப் பிடிப்பு தொடங்குகிறது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil