»   »  கமலினியை தூக்கிய சேரன்:ஸ்னேகா உள்ளே

கமலினியை தூக்கிய சேரன்:ஸ்னேகா உள்ளே

Posted By:
Subscribe to Oneindia Tamil

கரு. பழனியப்பனின் பிரிவோம் சந்திப்போம் படத்திலிருந்து நாயகி கமலினி முகர்ஜி நீக்கப்பட்டு விட்டாராம். அவருக்குப் பதில் நாயன் சேரனின் விருப்பத்திற்கேற் ஸ்னேகா சேர்க்கப்பட்டுள்ளார்.

வங்கம் தந்த தங்க தேவதை கமலினி முகர்ஜி. கரு.பழனியப்பன் இயக்க, சேரன் ஹீரோவாக நடிக்க பிரிவோம் சந்திப்போம் படத்தில் நாயகியாக புக் ஆனார் கமலினி.

வேட்டையாடு விளையாடு படத்தின் ஹிட்டைத் தொடர்ந்து கமலினியை இந்தப் படத்தில் புக் செய்தார் பழனியப்பன். இந்த நிலையில் படத்திலிருந்து தூக்கப்பட்டுள்ளார் கமலினி. அவருக்குப் பதில் ஸ்னேகாவை நாயகியாக்கியுள்ளனர். சேரன் விருப்பப்படி ஸ்னேகா நாயகியாகியுள்ளாராம்.

வேட்டையாடு விளையாடு படம் சூப்பர் ஹிட் ஆகியும் கூட, கமலினிக்கு புதிய படங்கள் எதுவும் வரவில்லை. இதனால் அவர் தெலுங்கு மற்றும் மலையாளத்தின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார்.

தெலுங்கில் 3 படங்களை முடித்து விட்டார் கமலினி. லாரன்ஸ் ராகவேந்திரா இயக்கத்தில் உருவாகும் ஸ்டைல் படத்திலும் ஒரு கேரக்டர் (தங்கச்சியாக) செய்துள்ளார்.

இந்த நிலையில்தான் கரு. பழனியப்பன் படத்தில் புக் ஆனார் கமலினி. ஆனால் கமலினியை செலக்ட் செய்ததில் சேரனுக்கு ஆரம்பத்திலிருந்தே விருப்பம் இல்லையாம். இருந்தாலும் சேரனை சமாதானப்படுத்தி கமலினியை புக் செய்தார் பழனியப்பன்.

இந்த நிலையில் பல விஷயங்களில் ஹீரோவுடன் ஒத்துப் போகவில்லையாம் கமலினி. மேலும் சம்பளத்தையும் அதிகமாக கேட்டாராம். இயக்குநருக்காக இதைப் பொறுத்துக் கொண்டாராம் சேரன். கமலினியை சகித்துக் கொண்டு முதல் ஷெட்யூல் ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டார்.

ஆனால் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்ததும், படத்தின் ரஷ்ஷைப் பார்த்த கரு. பழனியப்பன் அதிருப்தியாகி விட்டாராம். கமலினியின் நடிப்பு அவருக்கு பெரும் அப்செட்டாகி விட்டதாம். சேரனை விட வயதானவராக தெரிந்துள்ளார் கமலினி.

இந்த நிலையில் கரு. பழனியப்பனின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட சேரன், ஸ்னேகாவிடம் பேசியுள்ளார். இதையடுத்து கமலினியை தூக்கி விட்டு ஸ்னேகாவைப் போட்டு விட்டார்கள்.

சேரன் இயக்கம் பிளஸ் நடிப்பில் உருவான ஆட்டோகிராப்பில் நான்கு நாயகியர்களில் ஒருவராக நடித்தவர் ஸ்னேகா என்பது நினைவிருக்கலாம். மேலும் கரு. பழனியப்பனின் முதல் படமான பார்த்திபன் கனவு படத்திலும் ஸ்னேகாதான் நாயகி என்பதால் ஸ்னேகாவை நாயகியாக்குவதில் பழனியப்பனுக்கு டபுள் ஓ.கே.வாம்.

கரு. பழனியப்பன் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு என்பதால் சம்பளம் பற்றிக் கூட பேசாமல் உடனே ஒத்துக் கொண்டாராம் ஸ்னேகா.

இனியாவது படம் வேகமாக வளருமா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil