»   »  மழையில் ஸ்ரேயா கந்தசாமி

மழையில் ஸ்ரேயா கந்தசாமி

Subscribe to Oneindia Tamil
Click here for more images
தொடர் மழையால் ஏராளமான படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விக்ரம்-ஸ்ரேயா ஜோடியாக நடிக்கும் கந்தசாமி படக் குழு மட்டும் ஏகப்பட்ட மகிழ்ச்சியில் திளைத்து வருகிறது.

கலைப்புலி தாணு தயாரிக்கும் மிகப் பெரிய பட்ஜெட் திரைப் படமான, சுசி.கணேசன் இயக்கும் கந்தசாமியில் கதாநாயகன் விக்ரம் 5 வேடங்களில் நடிக்க உள்ளார். இதில் பெண் வேடமும் ஒன்று. இந்த படத்தின் துவக்க விழாவே வெகு பிரமாண்டமாக நடந்தது. இன்விடேசனிலேயே படத்தின் டிரைலர் ஓடியது.

படத்தின் துவக்க விழா நடந்து 20 தினங்களுக்கு மேலானாலும், படப்பிடிப்பு இன்று தான் துவங்குகிறது. கந்தசாமியின் முதற்கட்ட ஷூட்டிங் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நடைபெற உள்ளது.

தற்போது மழை சென்னை முழுவதும் வெளுத்து வாங்கினாலும் இவர்களுக்கு எந்த கவலையிலும் இல்லையாம்.

காரணம், படத்தில் மழைக் காட்சிகள் ஏராளமாக உள்ளனவாம். இதற்காக செட் போட திட்டமிட்டிருந்தவர்கள் இப்போது மழை கொட்டி வருவதால் ஸ்ரேயாவை மழையில் நனையவிட்டு காட்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

என்ன தான் செட் போட்டாலும் இயற்கையான மேக மூட்டத்துடன் கூடிய க்ளைமேட்டைக் கொண்டு வருவது சாத்தியமில்லை என்பதால் கொட்டும் மழையில் ஸ்ரேயா, விக்ரமை வைத்து படத்தை சுட ஆரம்பித்துள்ளனர்.

மழை படத்தின் மூலம் அறிமுகமானதாலோ என்னவோ ஸ்ரேயாவுக்கும் மழை என்றால் கொள்ளைப் பிரியம் என்பதால் அவரும் நல்ல ஒத்துழைப்பு தருகிறாராம்.

கிழக்கு கடற்கரை சாலையின் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் நடப்பதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டே சென்றார்கள்.

கன மழையில் நனைந்து கொண்டிருக்கும் கந்தசாமி வரும் தமிழ் புத்தாண்டு அன்று திரைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more about: kandasamy, shriya, vikram
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil