»   »  'கந்தசாமி' சஸ்பெண்ட்!

'கந்தசாமி' சஸ்பெண்ட்!

Subscribe to Oneindia Tamil
Vikram with Shriya
கலைப்புலி தாணுவின் தயாரிப்பில், சீயான் விக்ரம், சிலிர்க்க வைக்கும் ஷ்ரியா நடிக்க உருவாகிக் கொண்டிருக்கும் கந்தசாமி படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின்போது இயக்குநர் சுசி. கணேசனுக்கு காயம் ஏற்பட்டதால் இந்த சஸ்பென்சன்.

விக்ரம் முதல் முறையாக ஒன்றுக்கும் மேற்பட்ட அவதாரம் எடுத்துக் கலக்கும் கந்தசாமியின் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் நடந்து வருகிறது. கடந்த 40 நாட்களாக நடந்து வரும் இந்தப் படப்பிடிப்பு நேற்று போட் கிளப்பில் நடந்தது.

விக்ரமும், தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவும் பங்கேற்று நடித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக, ஒரு இரும்புக் கம்பி சுசி. கணேசன் காலில் விழுந்தது. இதனால் அவர் வலியால் துடித்தார். காலிலிருந்து ரத்தம் வழிந்தது.

உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரது காலைப் பரிசோதித்த டாக்டர்கள் ஒரு வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறி விட்டனர்.

இதன் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கணேசன் உடல் நலம் சரியாகி திரும்பி வந்த பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்குமாம்.

Read more about: kandasamy
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil