»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil
ஈர நிலம் பெரும் தோல்வியைக் கண்டதால் தனது கண்களால் கைது செய் படத்தில் கொஞ்சம் அதிகமாகவே கிளாமரைப் புகுத்திவிட்டார் பாரதிராஜா.


புதுமுகம் பிரியாமணியும் நன்றாகவே ஒத்துழைப்பதால் சூடான பல காட்சிகள் செருகப்பட்டு வருகின்றன.

இலங்கையில் சூட்டிங் நடத்திவிட்டு இப்போது முழு மூச்சாய் ஊட்டி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இலங்கையில் கிட்டத்தட்ட 5 வாரங்கள் நடந்த படப்பிடிப்பில் அந் நாட்டைச் சேர்ந்த முன்னணி நடிகர் சனத் குணதிலகே என்ற நடிகரையும் நடிக்க வைத்துள்ளார் பாரதிராஜா.

மேலும் சில குட்டி ரோல்களிலும் அந் நாட்டு நடிகர்களை தலை காட்ட வைத்துள்ளார்.

மிக வித்தியாசமான காதல் கதையாம். இதுவரை எந்தப் படத்திலும் இந்தக் கோணத்தில் காதல் பார்க்கப்பட்டதும் இல்லை, படமாக்கப்பட்டதும் இல்லை என்கிறார் பாரதிராஜா.

முதலில் இந்தப் படத்துக்கு தேவா இசையமைப்பதாக இருந்தது. அதைத் தவிர்த்துவிட்டு ஏ.ஆர். ரஹ்மானைப் போட்டு 5 பாடல்களையும் வாங்கிவிட்டார் பாரதிராஜா.

பாரதிராஜாவுக்கு வழக்கமாக பாட்டெழுதும் வைரமுத்து இல்லை என்கிறார்கள்.

இதில் பா.விஜய், வைரமுத்துவின் மகன் கபிலன், தேன்மொழி ஆகியோர் தான் பாடல்களை எழுதியுள்ளனர். தாஜ்மகாலுக்குப் பிறகு ரஹ்மான்-பாரதிராஜா கைகோர்ப்பது இதுவே முதல்முறை.

படத்தில் முதலில் கவர்ச்சியெல்லாம் வேண்டாம் என்று தவிர்த்துப் பார்த்தார்களாம்.

ஆனால், அழகும் இளமை வளமும் நிறைந்த பிரியாமணியை வைத்துக் கொண்டு கவர்ச்சியை ஏன் தவிர்க்க வேண்டும் என்று விவாதம் செய்து இப்போது அவரைக் களத்தில் இறக்கிவிட்டுள்ளார்களாம்.

இதற்காகவே காத்திருந்தது போல பிரியாமணியும் புகுந்து விளையாடி வருகிறாராம். பிரியாமணிக்கு இணையாக அட்டகாசமாய் இருக்கும் புதுமுக ஹீரோ வசீகரனும் குறைச்சல் இல்லையாம். இருவருமே டைரக்டர் சொல்வதை விடவும் அதிகமாகவே நெருக்கம் காட்டுகிறார்களாம்.

படத்தைப் பார்த்தாலே தெரியுது...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil