»   »  ஷிரியா- குரல் தரும் கனிகா

ஷிரியா- குரல் தரும் கனிகா

Subscribe to Oneindia Tamil

சிவாஜி நாயகி ஷ்ரியாவின் குரல் மாறி விட்டதாம். அதாவது படத்தில் அவருக்கு பின்னணி பேசுவதாக இருந்த சந்தியாவை மாற்றி விட்டு இப்போது கனிகாவை விட்டு கலகலக்க வைத்துள்ளாராம் ஷங்கர்.

சிவாஜி வரப் போகிறது. முன்கூட்டியே பாட்டுக்களைத் திருட்டுத்தனமாக சுட்டு நெட்டில் போட்டு வதைத்து விட்டார்கள். அடுத்து படம் கூட முன்கூட்டியே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கோலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருக்கிறது வதந்தி.

எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். சிவாஜி குறித்த முக்கியமான ஒரு மேட்டருக்குப் போவாம். அதாவது படத்தின் நாயகி ஷ்ரியாவுக்கு பின்னணி குரல் கொடுக்க யாரை தேர்ந்தெடுக்கலாம் என ஷங்கர் யோசித்தார்.

வழக்கமாக முன்னணி நாயகிகளுக்கு சவீதாதான் குரல் கொடுப்பார். ஆனால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று நினைத்து பலரையும் கூப்பிட்டுப் பேசிப் பார்த்து கேட்டார். எதுவும் திருப்தியாக வரவில்லை.

இந்த நிலையில்தான் நடிகை சந்தியாவின் குரல் அவரது காதுகளில் சிக்கி குஷியூட்டியது. அடடா, இதுவல்லவோ குரல், புடிடா சந்தியாவை என்று ஆள் அனுப்பி வரவழைத்து ஷ்ரியாவுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

முதலில் தயங்கினாராம் சந்தியா. இருந்தாலும் காதல் மூலம் வாழ்வு கொடுத்தவராச்சே முடியாதுன்னா நல்லாருக்குமா? எனவே சரி என்று கூறினார் சந்தியா.

ஆனால் இப்போது என்ன நடந்தது என்று தெரியவில்லை. சந்தியாவைத் தூக்கி விட்டு கனிகாவை வைத்து டப்பிங் பேச வைத்துள்ளாராம் ஷங்கர். ஏன் இந்த மாற்றம் என்று தெரியவில்லை. ஆனால் வில்லங்கமாக எதுவும் இருக்காது, கனிகாவின் குரல் சந்தியாவை விட நன்றாக இருப்பதால் அதற்கு மாறியிருக்கலாம் என்கிறார்கள்.

சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கூட, அவருடன் சேர்ந்து டப்பிங் பேசும் வாய்ப்பு கிைடத்திருப்பதால் படு சந்ேதாஷமாக உள்ளாராம் கனிகா.

எப்படியெல்லாம் கணக்குப் போடுறாங்கப்பா நம்மாளுங்க?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil