For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கரீஷ்மாவும் ப்ரீத்தியும்..

  By Staff
  |

  சில இந்தி சினிமாக்களில் நடித்துள்ள, மும்பை பார்ட்டி சர்க்கிளில் பிரபலமான கரீஷ்மா நடித்த முதல் படமே இன்னும்வெளிவராவிட்டாலும் அவருக்கும் இன்னொரு படம் கிடைத்துவிட்டது.

  பரிதி என்ற படத்தில் விக்னேசுக்கு ஜோடியாக நடிக்க இவர் தமிழுக்கு வந்தார். படத்தின் பெயரை கும்பகர்ணன் என்றுமாற்றிவிடலாம் போலிருக்கிறது. அந்த மாதிரி பெட்டியில் சுருண்டு படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறது.

  படம் பூராவும் கவர்ச்சியால் இடி, மின்னல், புயல், சுனாமி என இயற்கை இன்னல்கள் அனைத்தையும் பிலிமில் ஏற்றிவிட்டார்கரீஷ்மா.

  ஆகஸ்ட்ல வருது, டிசம்பர்ல வருது என்று புலி வருது கதை மாதிரி சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார்கள். படம்வந்தபாடியில்லை. இதனால் தயாரிப்பாளர் வயிற்றில் கனகனவென நின்று எரியும் கங்குடன் புகையாகிக் கொண்டிருக்க,கரீஷ்மாவுக்கு கவலையேதும் இல்லை.

  காரணம், அவரை ஆலமரமாய் நின்று அடைகாத்துவிட்டார் வில்லன் நடிகர் கரிகாலன்.

  இவர் இயக்கும் வைரவன் என்ற படத்தில் கரீஷ்மா தான் ஹீரோயின். கூடவே சத்யா என்ற ஹீரோவையும் அறிமுகப்படுத்துகிறார்.

  இதில் சத்யா நடித்தாலும் முக்கிய வேடத்தில் நடிக்கப் போவது இயக்குனர் கரிகாலனே தான். அவருக்குத் தான் ஹீரோ வேடமாம்.சத்யா சும்மா டம்மி தான்.

  அந்த கால எம்ஜிஆர் படங்களில் வரும் ராட்சஷ வில்லன்கள் மாதிரி இருக்கும் கரிகாலனுக்கு ஒரு ஹீரோயின் நிச்சயம் பத்தாதுஎன்பதால் கரீஷ்மா என்ற சிறு குன்றுடன் ப்ரீத்தி அரோரா என்ற கிரனைட் பளபளப்பு கொண்ட பெரும் பாறையையும் செகண்ட்ஹீரோயினாக்கியிருக்கிறார்.


  காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்கப் போகிறவர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் இந்தப் படத்தில்கரிகாலன் அழுகிறார், பாடுகிறார், புல்லாங்குழல் வேறு ஊதுகிறார்.

  கரீஷ்மாவையும், ப்ரீத்தி அரோராவையும் (முதலில் பெயரை மம்தா ஷெட்டி என்று சொன்னார்கள்) தூக்கி வைத்துக் கொண்டுஆடவும் வேறு செய்கிறார்.

  கரிகாலன், ஹீரோயின்கள் என சகலரும் சதையோடு வந்த சதாய்க்கும் இந்தப் படத்தில் கதை இருக்கா என்று கேட்டால், அதுஇல்லாமலா.. ரொம்ப ஆழமான கதைங்க என்கிறார்கள்.

  இப்படி சத்யா, கரீஷ்மா, ப்ரீத்தி அரோரா, அலெக்ஸ், ரோஷிணி, பாண்டியராஜன், பானுசந்தர், நந்திதா, ஆனந்தராஜ் என பேர்போன ஆட்களை வைத்து தைரியமாக படமெடுப்பது ரோஷன் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம்.

  நடிப்பதோடு, கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ட் செய்பவர் கரிகாலன்.

  கேரளா, இலங்கை, பாண்டிச்சேரி, சென்னை என படப்பிடிப்பை அவ்வப்போது நடத்தி வருகிறார்கள்.

  கரீஷ்மாவுக்கும் ப்ரீத்திக்கும் இந்தப் படத்தைத் தொடந்து தான் இயக்கும், நடிக்கும் படங்களிலும் வாய்ப்பளிப்பதாகஉறுதியளித்திருக்கிறாராம் கரிகாலன். இதனால் அவருக்கு இந்த இரு நடிகைகளிடம் இருந்து கிடைக்கும் ஒத்துழைப்புஇருக்கிறதே...

  அதைத் தான் கோலிவுட்டே புல்லரித்துப் போய் பேசிக் கொண்டிருக்கிறது.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X